Wednesday, January 23, 2013

எந்நாடுடைய இயற்கையே போற்றி




எந்நாடுடைய இயற்கையே போற்றி - கோ. நம்மாழ்வார்; பக்.88; ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை-2; 044-2852 4074.
புத்தகத்தின் தலைப்பே போதும், இது இயற்கை சார்ந்தது என்பதற்கு! இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை மிக எளிதாக சிறுபிள்ளைக்கு விளக்குவதைப் போல அழகாகச் சொல்கிறார் நம்மாழ்வார்.
ரசாயன உரங்களின் தீமை மட்டுமின்றி, பாரம்பரிய விவசாயத்தின் மூலம் நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தேவையற்ற செலவுகள், பன்னாட்டு நிறுவனங்களை அண்டிநிற்கும் அவல நிலை ஆகியவற்றைத் தவிர்க்க முடியும் என்பதே இந்த நூலின் அடிப்படைக் கருத்து.
இந்நூல் இயற்கை வேளாண்மை குறித்த அறிமுகம் மட்டுமே. வேளாண்மையில் ஈடுபடாத, ஆனால் இயற்கை வேளாண்மையைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிற எவரும் படிக்கவேண்டிய நூல்.

No comments:

Post a Comment