Thursday, January 24, 2013

தைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!




பனிரெண்டு பவுர்ணமிகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சிறப்புக்களைக் கொண்டிருக்கிறது.தை மாதத்தில் ரவியாகிய சூரியன்,மகர ராசியைக்  கடந்து செல்வார்;மதியாகிய சந்திரனோ தனது சொந்த வீடான கடகராசியின் மையத்தில் இருப்பார்;எனவே,இந்த பவுர்ணமி மிக மிக மிக உன்னதமானதாக இருக்கிறது.ஜோதிடத்தின் அடிப்படை அறிந்தவர்களுக்கு இதன் மகத்துவம் புரியும்.கடவுளை நம்பாமல் காலண்டரை தமது இஷ்டப்படி மாற்றுபவர்களுக்கு எப்படிப் புரியும்?


ஓம் கார மந்திரத்தின் நிறைவு நிலைக்கு மகரம் என்று பெயர்.அ ப்ளஸ் உ ப்ளஸ் ம் என்ற எழுத்துக்களின் சேர்க்கையே ஓம் ஆகும்.உலகம் ,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றும் ஓம் காரத்திலிருந்தே உருவாகின.தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாளில் ரவி உதயமாகும் நேரத்தில்,மதியும் வானில் இருக்கும்.சந்திரன் என்பது மனதால் அறியப்படும் அறிவு; சூரியன் என்பது  ஜீவ அறிவு; அக்னி என்பது அண்ணாமலையாகிய சதாசிவனை குறிப்பால் உணர்த்தும் ஆன்மா அறிவு.சந்திரன்,சூரியனில் அடங்கி,சூரியன் அக்னியில் அடங்கி,அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைப்பூசம்.மனம் ஜீவனில் அடங்கி ஜீவன் ஆன்மாவில் அடங்கி ஆன்மா சதாசிவத்துடன் கலந்து விடும் என்பதைக் காட்டவே தைப்பூசத்தன்று வடலூரில் ஸ்ரீராமலிங்க அடிகளாரின் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் விலக்கப்பட்டு அக்னியாகிய ஜோதி காட்டப்பட்டுவருகிறது.ஞான மார்க்கம்,தியான மார்க்கத்தில் ஈடுபடும் சில ஆயிரம் ஆத்மாக்கள் அன்று வடலூரில் இந்த காட்சியைக் காண கூடுவார்கள்;இவர்கள் அனைவருமே இப்பிறவியில் தனது கர்ம வினைகளைக் கரைக்கப் பிறந்தவர்கள்.


தைப்பூசமானது 26.1.13 சனிக்கிழமை மதியம் 3.03 க்கு உதயமாகிறது;மறுநாள் 27.1.13 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.44 வரை இருக்கிறது.எனவே,தைப்பூசத்தை நாம் ஞாயிற்றுக்கிழமை காலை என்று எடுத்துக் கொள்ளலாம்.


இந்த நாளில்,ஓம்சிவசிவஓம் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் மந்திர ஜபம் செய்ய விரும்புவோர் சனிக்கிழமை இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும் தமது வீட்டில் நேரம் ஒதுக்கலாம்;சந்தர்ப்பம் அமைந்தால்,அருகில் இருக்கும் ஜீவசமாதிகள் அல்லது மலைப்பகுதிகளுக்குச் சென்று ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.இந்த நாளில் எவ்வளவு அதிகமான நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறோமோ அந்த அளவுக்கு நமது கர்மவினைகள் கரைந்துவிடும்;ஏனெனில்,பூசமானது ஒளிமிகுந்த நட்சத்திரம் மட்டுமல்ல;நமது கர்மாக்களுக்கு காரகனாகிய சனியின் நட்சத்திரம்;இந்த நட்சத்திரத்தில் நமது மனமாகிய சந்திரன் பவுர்ணமி என்ற பெயரில் பூரண பலம் பெறுவதால்,மிக மிக மிக சக்தி வாய்ந்த பவுர்ணமியாக உருவாகிறது.


சனிக்கிழமை இவ்வாறு ஜபிக்க இயலாதவர்கள்,மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரையில் ஓம்சிவசிவஓம் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் மந்திர ஜபம் செய்யலாம். முயலுவோம்.பிறப்பு என்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்து எறிவோம்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment