யோகாசனம் என்பதை மனதை கட்டுப்படுத்துவது, கட்டுவது, சேர்ப்பது என அர்த்தமாகும்.
முனிவர் பதஞ்சலிதான் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார். அவர்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யோக சூத்ராவை எழுதினார். அவர் எட்டு விதமான யோக ஒழுங்குகளின் கொள்கைகளை விஷயங்களைச் சூத்திரங்களாக வகுத்துத் தந்தார். யோக சூத்ரா தான் யோகாசனம் பற்றி முக்கியமான மற்றும் அடிப்படை நூல் இத்தத்துவங்களை வைத்து தான் யோகாசனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரப்பப் படுகிறது.
யோகா இந்தியாவில் உருவாக்கப்பட்டது. உடல் மற்றும் மன ஒழுங்குகளைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குகளால் எட்டப்படும் இலக்குகளைக் குறிக்கிறது. இந்து சமய தத்துவ மரபின் ஆறு பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது. யோகத்தின் முக்கிய வழிகள் ராஜ யோகா, கர்ம யோகா, ஞான யோகா, மந்த்ர யோகா, கர்ம யோகா, ஞான யோகா, மந்த்ர யோகா, பக்தி யோகா, ஹட யோகா முதலியவை. பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் பதிவு செய்யப்படட ராஜ யோகாதான். இந்து தத்துவ மரபில் யோகா என்றே எளிமையாகக் குறிப்பிடப்படுகிறது.
இது சாம்யக்யா மரபைச் சார்ந்தது. மொத்தம் 196 சூத்திரங்கள் உள்ளன. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, ஹத யோக பிரதிபிகா, சிவசம்ஹிதா இன்னும் பல நூல்கள் யோகா அம்சங்களை பற்றி பேசுகின்றன.
படிப்புகள்: பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.பில் மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகளாக யோகா கற்பிக்கப்படுகிறது.
பயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. யோகா படித்தவர்கள் சொந்தமாக யோகா நிலையங்கள் அமைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலம் மக்களின் வலிமை, சிந்திக்கும் ஆற்றல் உடலளவில் புத்துணர்ச்சி, நல்ல எண்ணம் ஆகியவை வலுப்பெறும். யோகா பயிற்சியாளர் தவிர யோகா ஆசிரியர், யோகா பயிற்சியாளர் தவிர, யோகா ஆசிரியர், யோகா சிகிச்சை நிபுணர், உடற்பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளர் மற்றும் யோகா பேராசிரியர் ஆகிய பணிகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் யோகா படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.
யோகசன படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
1. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
2. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
3. தீன தயாள் உபத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், கோரக்பூர்
4. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
5. ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி
6. சென்னை பல்கலைக்கழகம், சென்னை
7. ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
No comments:
Post a Comment