காப்பான கருவூரார் போக நாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
பூஜாவிதி ஏழில் கவி எண் இரண்டு.
மாமேரு எனத் திகழும்,இந்த 14 ஞானிகள் அடங்கிய இந்தப் பாடலை தினமும் காலையிலும்,மாலையிலும் படித்து பாராயணம் செய்தும்,தினமும் பூஜை செய்தும் வந்தால்,மனித வர்க்கம் அடையமுடியாத,அறியமுடியாத,உணரமுடியாத ஒன்றை நாம் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
அப்படி உணரும் நிலையை நாம் ஒவ்வொருவரும் எட்டிட குறைந்தது ஒரு வருடமும்,அதிக பட்சம் மூன்று வருடமும் தினமும் அதிகாலை அல்லது அந்திமாலையில் இந்த பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.
நன்றி:சித்தர்களின் தலைவர் அகத்தியர். ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment