Tuesday, May 15, 2012

ஒருவரே தினமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபமும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும் ஏன் செய்யக் கூடாது?


ஏனெனில்,இரண்டுமே வெவ்வேறு சக்திவாய்ந்தவை;இரண்டுமே மிகக் குறைந்த காலத்துக்குள் அளவற்ற பலன்களைத் தரக்கூடியவை;இரண்டுமே நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றக் கூடியவை;இரண்டுமே தினமும் பின்பற்றுபவர்களுக்கு(ஓம்சிவசிவஓம் ஜபித்தல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு செய்தல்) ஒவ்வொரு நொடியும் ஆத்ம பாதுகாப்பு கொடுத்து,அவரவரின் வாழ்க்கையையே வழிநடத்தக் கூடியவை;இரண்டுமே நமது ஆத்மபலத்தை பல மடங்கு அதிகபடுத்தி,மாந்திரீகப்பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கக் கூடியவை;இரண்டுமே நமது மனதிற்கு பலவிதமான சூட்சும சக்திகளை அருளக்கூடியவை(இதைப் பெற குறைந்த பட்சம் தினமும் ஒருமுறை வீதம் ஓராண்டுவரை அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு பின்பற்றிட வேண்டும்!!!)

ஜாதகப்படி சில குறிப்பிட்ட கிரகநிலைகளில் பிறந்துள்ளவர்கள் ஓம்சிவசிவஓம்  ஜபிக்கலாம்;(இதை அறிந்து கொள்ள நமது ஆன்மீகக்கடல் மின் அஞ்சலுக்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்)அல்லது நீங்கள் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு இவைகளைப் பற்றி நமது ஆன்மீகக்கடலில் வாசிக்கும்போது எது உங்களை வசீகரிக்கிறதோ,அதை பின்பற்றலாம்.

பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்கள்.மாதம் ஒருமுறை வரும் தேய்பிறை அஷ்டமியன்று மட்டும் அவரவர் வாழும் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்.இவ்வாறு செய்வதே முறையானது ஆகும்.

மணமான தம்பதியர்,ஒருவர் தினமும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை ஜபித்து வர,மற்றவர் தினமும் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவரலாம்.இது மிகவும் சுலபமானது;இதில் ஒரே ஒரு கட்டுப்பாடு உண்டு.யார் ஓம்சிவசிவஓம் ஜபிக்கிறார்களோ,அவரே கடைசி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;(ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு மாறக்கூடாது)

யார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்கிறார்களோ அவர் கடைசி வரை இந்த வழிபாட்டைக் கைவிடக்கூடாது;கைவிடக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உண்டானாலும் கூட ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டாம்.(இதற்கு சூட்சும ரீதியான விளக்கங்கள் உண்டு.நேரில் மட்டுமே இதை விளக்கமுடியும்)

கணவன்,மனைவி இருவரும் இவ்வாறு அவரவர் ஆன்மீக வழிபாட்டை குறைந்தது ஒரு வருடம் வரையிலும்;அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரையிலும் பின்பற்றி வந்தாலே அவர்களின் அடுத்த ஐந்து தலைமுறையினர் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவருவார்கள் என்பது குரு உபதேச உண்மை ஆகும்.

ஓம்சிவசிவஓம்


1 comment:

  1. வணக்கம் மிஸ்டிக் செல்வம் அவர்களே,

    நான் அடிக்கடி உங்கள் வளத்தை பார்த்து வருகிறென்.

    அதெபோல் இந்த "ஓம் சிவசிவ ஓம் " என்ற மந்திரத்தை கூறி வருகிறேன். ஆனால் நான் ஜப மாலையை வைத்து செய்கிறேன். உட்காறும் பொலுது மஞ்சள் துண்டுக்கு பதிலாக தர்ப்பை பாயை வைத்து செய்கிறேன். ஐயா இதில் ஏதும் தவறு உண்டா?
    தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்.

    ஜபம் செய்யும் பொலுது ஒரு விதமான உஷ்னம் என்னுடைய உடம்புக்கும் பாயைக்கும் இடையில் உறுவாகிறது. இது சில சமையம் என்னை அதிர வைக்கிறது. இதற்கு என்ன காரணம் ஐயா?

    ReplyDelete