பவகார யோகம் என்பது காற்றைச் சாப்பிடுவது என்ற அர்த்தமாகும்.தொடர்ந்து ப்ராணயாமப்பயிற்சிகளால் ஒருவருக்கு திட மற்றும் திரவ உணவுகளை ஒதுக்கி வாயுவாகிய காற்றை மட்டும் உண்டு(சுவாசித்து) வாழக்கூடிய தகுதி கிடைத்துவிடும்.காற்றை மட்டும் உண்டு வாழும் யோகிக்கு உடலில் கழிவுப்பொருட்கள் உண்டாவதில்லை;உடல் நறுமணமாக கமழத்துவங்கும்.இந்த யோகிகளுக்கு மரணம் என்பதே கிடையாது.மரணத்தின் மீது முழு ஆதிக்கம் பெற்றவர்கள் இந்த பவகார யோகம் கைகூடியவர்கள்!
மூச்சின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி,மனதின்மீது முழு ஆதிக்கத்தைக் கொண்டு வந்து, புலன் ஈர்ப்பு விசை எல்லைகளைக் கடந்து,புவியீர்ப்பு விசை எல்லைகளையும் கடந்து,மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் வல்லமையை இந்த பவகாரயோகம் கொடுத்துவிடுகிறது.எப்படி இவைகளைக் கொடுக்கிறது என்பதை வார்த்தைகளால் யாராலும் விவரிக்க முடியாது.உணர்வுகளால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
இமய மலையில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஸ்ரீமகா அவதார பாபாஜி,அவருடைய தமக்கையார் ஸ்ரீநாகலட்சுமி தேவியார் ஆகியோர் இந்தவகை யோகிகளுக்கு உதாரணம் ஆகும்.
மேலும் ஸ்ரீகவுரிசங்கர் பீடத்தில் பாபாஜியுடன் வசித்துவரும் 8 சீடர்களும் இதற்கு உதாரணம் ஆகும்.இமயமலையில் வரலாற்றுக்குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்துவரும் பல்வேறு யோகியர்களும் இதற்கு உதாரணம் ஆகும்.
நன்றி:சித்தர் களஞ்சியம் பக்கம் 108.
No comments:
Post a Comment