அசுபதி/அஸ்வினியை புரவி என்றும், பரணியை அடுப்பு என்றும்,கார்த்திகை/கிருத்திகையை ஆரல் என்றும்,ரோகிணியை சகடு என்றும்,மிருகசீரிடத்தை மான்றலை என்றும்,திருவாதிரையை மூதிரை என்றும்,புனர்பூசத்தை கழை என்றும்,பூசத்தை கொடிறு என்றும்,ஆயில்யத்தை அரவு என்றும்,மகத்தை கொடுநுகம் என்றும்,பூரத்தை கணை என்றும்,உத்திரத்தை உத்தரம் என்றும்,அஸ்தத்தை கை என்றும்,சித்திரையை அனுபை என்றும்,சுவாதியை விளக்கு என்றும், விசாகத்தை முறம் என்றும், அனுஷத்தை பனை என்றும்,கேட்டையை துலங்கொலி என்றும், மூலத்தை குருகு என்றும், பூராடத்தை முற்குலம் என்றும்,உத்திராடத்தை கடைக்குலம் என்றும்,திருவோணத்தை முக்கோல் என்றும்,அவிட்டத்தை காக்கை என்றும்,சதயத்தை செக்கு என்றும்,பூரட்டாதியை நாழி என்றும்,உத்திரட்டாதியைஅ முரசு என்றும்,ரேவதியை தோணி என்றும் நமது முன்னோர்களாகிய சித்தர்கள் பரிபாஷையாக வைத்திருந்தனர்.
சித்திரை மாதத்தை மேழம் என்றும்,வைகாசியை விடை என்றும்,ஆனியை ஆடவை என்றும்,ஆடியை கடகம் என்றும், ஆவணியை மடங்கல் என்றும்,புரட்டாசியை கன்னி என்றும், ஐப்பசியை துலை என்றும், கார்த்திகையை நளி என்றும், மார்கழியை சிலை என்றும்,தையை சுறவம் என்றும்,மாசியை கும்பம் என்றும்,பங்குனியை மீனம் என்றும் பயன்படுத்திவந்தனர்.இவைகளை தற்காலத்தில் தமிழறிஞர்களும்,தமிழ் காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
வேர்களிலிருந்தே நம்மை சீர்திருத்தினால்,தமிழ் உலகை ஆளத்துவங்கிவிடும்.செய்வோமா?
ஓம்சிவசிவஓம்
on what basis they had choosed this names for rasi and tamil months?
ReplyDelete