Monday, May 14, 2012

ஆம்புலன்ஸிலும் ஈவிரக்கமின்றி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்!!!


சிகிட்சா ஹெல்த்கேர் என்று ஒரு சேவை நிறுவனம் NRHM   என்று சொல்லப்படும் மத்திய அரசின் திட்டமான National Rural Health Mission எனப்படும் தேசிய ஊரக ஆரோக்கியத்திட்டத்தின் கீழ்தான் 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.மஹாராஷ்டிரா,ராஜஸ்தான் போன்ற காங்கிரஸின் ஆளும் மாநிலங்கள் உட்பட எட்டு மாநிலங்களில் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்ட மேலே குறிப்பிட்ட சிகிட்சா ஹெல்த் கேர் சேவை நிறுவனம்,சேவை செய்ததோ இல்லையோ லஞ்ச ஊழலில் ஈடுபட்டது.

மஹாராஷ்டிராவில் 37,000 டிரிப்கள் அடித்துவிட்டு 52,000 டிரிப்களுக்கு மத்திய அரசிடமிருந்து பணம் பெற்றிருக்கிறது.

ராஜஸ்தானில் ஒரே ஒரு 108 வாகனம் ஒரே நாளில் 243 நோயாளிகளை மருத்துவமனைகு பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வந்துள்ளது.
அதாவது ஒரே நாளில் 243 X 2=486 டிரிப்கள் அடித்துள்ளது நடக்குமா என்ன?

இந்த சிகிட்சா ஹெல்த் கேர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இவர்கள்தாம்: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்,மறைந்த அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகனும் மத்திய இணை அமைச்சருமான சச்சின் பைலட்,கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வயலார் ரவியின் மகன் ரவிக்ருஷ்ணன்,மருமகள் திருமதி ரவி க்ருஷ்ணன்,உம்மன் சாண்டியின் ஆலோசகரான ஷாபி மாத்தர்,ஸ்வேதா மங்கள் என்ற காங்கிரஸ் தலைவரின் மகள் ஆகியோர்.
இவர்கள் நாட்டை ஆள்கிறார்களோ என்னவோ, கூட்டுச் சேர்ந்து கம்பெனி நடத்துகிறார்கள்.ஊழல் செய்கிறார்கள்.ஊழல் செய்வதற்காக மத்திய அரசை திட்டம் தீட்டச் சொல்கிறார்கள்;பயனை அனுபவிக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பு சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்த ராகுல் மூத்த தலைமுறை ஊழலை தன்னால் கட்டுப்படுத்த முடியாது;ஆனால்,நம்பிக்கை தரும் இளைய தலைமுறையை ஊழல் அற்றதாக ஆக்க முடியும்.அந்தப் பணியில்தான் நான் ஈடுபட்டுவருகிறேன் என்று இனிமையாகப் பேசினார்.

மூத்த தலைமுறையாவது கூட்டுக் கொள்ளை அடிக்காமல் இருந்தது.இளைய தலைமுறை ஊழலில் சரித்திரம் அல்லவா படைக்கிறது!!!

அது சரி,இவர்கள் என்ன சோற்றுக்கு வழி இல்லாதவர்களா ஆம்புலன்ஸ் பிஸினஸ் செய்வதற்கு?

வெறும் ஊழல் மட்டும்தானா அல்லது ஆம்புலன்ஸில் வேறு ஏதாவது நடக்கிறதா?மனித கடத்தல்,பொருள் கடத்தல்?!!
ஊழலுக்கு எதிரான இந்தியா என்பதை  India Against Corruption என்று கூறினார்கள்.மூத்த தலைமுறையோ இளைய தலைமுறையோ India Against Congress என்றால்தான் நாடு காப்பாற்றப்படும்.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 20;மே 2012.

1 comment:

  1. அய்யா சரியாக சொன்னீர்கள் . நன்றி

    ReplyDelete