Showing posts with label ஓம்சிவசிவஓம். Show all posts
Showing posts with label ஓம்சிவசிவஓம். Show all posts

Tuesday, May 15, 2012

ஒருவரே தினமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபமும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும் ஏன் செய்யக் கூடாது?


ஏனெனில்,இரண்டுமே வெவ்வேறு சக்திவாய்ந்தவை;இரண்டுமே மிகக் குறைந்த காலத்துக்குள் அளவற்ற பலன்களைத் தரக்கூடியவை;இரண்டுமே நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றக் கூடியவை;இரண்டுமே தினமும் பின்பற்றுபவர்களுக்கு(ஓம்சிவசிவஓம் ஜபித்தல் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு செய்தல்) ஒவ்வொரு நொடியும் ஆத்ம பாதுகாப்பு கொடுத்து,அவரவரின் வாழ்க்கையையே வழிநடத்தக் கூடியவை;இரண்டுமே நமது ஆத்மபலத்தை பல மடங்கு அதிகபடுத்தி,மாந்திரீகப்பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கக் கூடியவை;இரண்டுமே நமது மனதிற்கு பலவிதமான சூட்சும சக்திகளை அருளக்கூடியவை(இதைப் பெற குறைந்த பட்சம் தினமும் ஒருமுறை வீதம் ஓராண்டுவரை அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு பின்பற்றிட வேண்டும்!!!)

ஜாதகப்படி சில குறிப்பிட்ட கிரகநிலைகளில் பிறந்துள்ளவர்கள் ஓம்சிவசிவஓம்  ஜபிக்கலாம்;(இதை அறிந்து கொள்ள நமது ஆன்மீகக்கடல் மின் அஞ்சலுக்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்)அல்லது நீங்கள் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு இவைகளைப் பற்றி நமது ஆன்மீகக்கடலில் வாசிக்கும்போது எது உங்களை வசீகரிக்கிறதோ,அதை பின்பற்றலாம்.

பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்கள்.மாதம் ஒருமுறை வரும் தேய்பிறை அஷ்டமியன்று மட்டும் அவரவர் வாழும் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்.இவ்வாறு செய்வதே முறையானது ஆகும்.

மணமான தம்பதியர்,ஒருவர் தினமும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை ஜபித்து வர,மற்றவர் தினமும் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவரலாம்.இது மிகவும் சுலபமானது;இதில் ஒரே ஒரு கட்டுப்பாடு உண்டு.யார் ஓம்சிவசிவஓம் ஜபிக்கிறார்களோ,அவரே கடைசி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;(ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு மாறக்கூடாது)

யார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்கிறார்களோ அவர் கடைசி வரை இந்த வழிபாட்டைக் கைவிடக்கூடாது;கைவிடக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உண்டானாலும் கூட ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டாம்.(இதற்கு சூட்சும ரீதியான விளக்கங்கள் உண்டு.நேரில் மட்டுமே இதை விளக்கமுடியும்)

கணவன்,மனைவி இருவரும் இவ்வாறு அவரவர் ஆன்மீக வழிபாட்டை குறைந்தது ஒரு வருடம் வரையிலும்;அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரையிலும் பின்பற்றி வந்தாலே அவர்களின் அடுத்த ஐந்து தலைமுறையினர் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவருவார்கள் என்பது குரு உபதேச உண்மை ஆகும்.

ஓம்சிவசிவஓம்


Wednesday, September 7, 2011

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு தெய்வீக வேண்டுகோள்





















தமிழ்நாட்டில் 38,000 புராதனமான கோவில்கள் இருக்கின்றன.இவைகளில் சைவ மற்றும் வைஷ்ணவ கோயில்களும்,பிற கோவில்களும் உண்டு.ஆன்மீக ஆராய்ச்சியாளரும்,நமது ஆன்மீக வழிகாட்டியுமாகிய சிவதிரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் நோக்கங்களில் ஒன்றான ஓம்சிவசிவஓம் பரப்பதலை உலகம் முழுவதும் விரிவுபடுத்திட ஆசைப்படுகிறேன்.இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் சக்தியை ஆன்மீகக்கடல் வாசகர்களில் பலர் ஜபித்து உணர்ந்திருப்பீர்கள்.(வைஷ்ணவ வாசகர்கள் ஓம்ஹரிஹரிஓம் என ஜபிக்கவும்)



தமிழ்நாடு மாநிலத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.தமிழ்நாடு தவிர,பிற மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும் சுமார் 3 கோடித்தமிழர்கள் வாழ்ந்துவர,ஆக தமிழர்களின் எண்ணிக்கை 10,00,00,000(பத்து கோடி)பேர்களாகும்.இவர்கள் அனைவருக்கும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் பரவ ஆன்மீகக்கடல் ஆசைப்படுகிறது.இந்த புனிதமான சிவத்தொண்டினைச் செயல்படுத்திட விரும்பும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் மூன்று விதங்களில் செயல்படமுடியும்.




1.உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் பிரதோஷ நாட்களில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாக அச்சடித்து விநியோகிக்கலாம்.(அச்சடிக்க இயலாதவர்கள் aanmigakkadal@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.)இப்படி ஐந்து ஆண்டுகள் வரை ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் விநியோகிக்க வேண்டும்.உங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் இதை நீங்களாக மனமுவந்து செய்துவருக!!!



2.ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அச்சடிக்க அன்பளிப்பு அனுப்பலாம்.1000, 2000, 5000, 10,000 50,000 எண்ணிக்கையில் அச்சடிக்க அன்பளிப்பு தரலாம்.(அல்லது) உங்கள் ஊரிலேயே உங்கள் நேரடி மேற்பார்வையில் அச்சடித்து,ஆன்மீகக்கடல் முகவரிக்கு அனுப்பலாம்.



3.வெளிமாநிலம்,வெளி நாடுகளில் இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து,உங்கள் பகுதியில் அச்சடித்து விநியோகிக்கலாம்.



4.தமிழ் மொழியுடன் ஆங்கிலம்,மலையாளம்,இந்தி,பிரெஞ்சு,ரஷ்யன்,சைனம்,ஸ்பானிஷ்,டச்சு என உலகின் எந்த மொழியாக இருந்தாலும் அவற்றில் பின்வரும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்யும் வழிமுறையை மொழிபெயர்த்து எமக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்.இதன் மூலமாக உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களில் 100 கோடி மனிதர்களுக்கு ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்பிட முயலுவோமே!(பேராசைதான்.ஆன்மீகக்கடலின் ஆன்மீகப் பேராசை)



5.அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் பல அழிவுகள் மனிதர்களைத் தாக்க இருப்பதால்,அவற்றை தடுக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்திற்கு உண்டு.எனவே,இணையம் வழியாகவும்,நேரடியாகவும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தைப் பரப்புவோம்.எல்லோரும் ருத்ர அம்சமாக மாறுவோம்.



ஓம்சிவசிவஓம்





Sunday, July 17, 2011

ஓம்சிவசிவஓம்


ஓம்சிவசிவஓம் தினமும் ஒரு மணி நேரம் ஜபிப்போம்;ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,கண்டச் சனி, வறுமை,நோய்,எதிர்ப்புகளை அடியோடு நீக்கி நிம்மதியும்,செல்வ வளமும் பெற்று வாழ்வோம்




Thursday, October 7, 2010

நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு

நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு

இன்று புரட்டாசி மாத அமாவாசை;(7.10.2010 வியாழன்).இன்று நள்ளிரவு சுமார் 1.40 மணி வரையிலும் அமாவாசை இருக்கிறது.இந்த நாளை நமது முற்பிறப்புப் பாவங்கள்,கர்மங்களை அழிப்பதற்கான ஆரம்பநாளாக வைத்துக்கொள்வோம்.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில்,கதர்க்கடைக்குச் சென்று ஒரு ருத்ராட்சம் வாங்கிக்கொள்ளவேண்டும்.விலை ரூ.30 முதல் ரூ.100க்குள் இருக்கும்;மஞ்சள் நிற துண்டு இரண்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஒரு சாதாரண மஞ்சள் துண்டு விலை ரூ.25 லிருந்து ஆரம்பமாகும்.உங்கள் ஊரிலிருக்கும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று சிவனை வணங்கி,கொஞ்சம் விபூதி வாங்கி வரவேண்டும்.
இன்று முதல் எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது;எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது;இந்த இரண்டு கொள்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.அப்படிப் பின்பற்றினால்தான்,நமது பாவங்கள் தீரும்!!!

இன்றிரவு தூங்கும் முன்பு,நமது வீட்டில் கிழக்கு நோக்கி அல்லது வடக்குநோக்கி அமரும் விதமாக மஞ்சள் துண்டினை விரிக்க வேண்டும்;இன்னொரு மஞ்சள் துண்டினை இடுப்பில் கட்டிட வேண்டும்.கழுத்தில் ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.எந்த முக ருத்ராட்சமாகவும் இருக்கலாம்;(செல்போன்,டிவி,தொலைபேசி,காலிங் பெல்லை அணைத்துவிடவும்;அல்லது சைலன் ட் மோடில் வைக்கவும்)சிவாலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்.முதுகு நேராக இருக்குமாறு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரவேண்டும்.ஆழ்ந்து மூச்சுவிடவேண்டும்.ஒரு முறையல்ல;குறைந்தது 9 முறை!

முதலில் விநாயகரை நினைத்து வழிபட்டுக்கொள்ள வேண்டும்;அடுத்ததாக நமது குல தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும்;மூன்றாவதாக நமது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டும்.(குலதெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபட்டுக்கொள்ள வேண்டும்)அதன் பிறகு,கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
ஓம் சிவசிவ ஓம்; ஓம் சிவசிவ ஓம் என தொடர்ந்து அரை மணிநேரம் வரை ஜபிக்க வேண்டும்.அரை மணி நேரத்துக்குப் பிறகு,மஞ்சள் நிறத்துண்டிலிருந்து எழுந்து,ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்கவும்;மஞ்சள் துண்டுகளை மடித்து பத்திரப்படுத்தவும்;எக்காரணம் கொண்டும் அவற்றை நீரில் நனைக்கக் கூடாது;இந்த விபூதி,ருத்ராட்சம்,மஞ்சள் துண்டுகளை யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தரக்கூடாது;


இதே போல்,தினமும் காலை அரைமணி நேரம்,மாலை அல்லது இரவு அரை மணி நேரம் செய்து வரவும்.100 நாட்களில் நமது நீண்ட காலப்பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

இந்த 100 நாட்கள் மட்டுமல்ல;தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இந்த ஒரே ஒரு வழிபாட்டுமுறையைப் பின்பற்றவும்.

குழந்தைப்பிறந்த அன்றும்,ஒருவர் மரணமடைந்த அன்றும் அந்த வீடுகளுக்குச் செல்லக்கூடாது;(இந்த 100 நாட்கள் வரையிலும்)

போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்,அன்று முதல் ஐந்து நாட்கள் வரை இந்த மந்திரஜபத்தை தவிர்க்கவும்.

ஒரு குழந்தை பிறந்திருந்தால்,15 நாட்கள் கழித்தும்,ஒருவர் மரித்துவிட்டால்,அவர் மரித்த 16 ஆம் நாளன்றும் போய் சந்திக்கலாம்;அப்படி சந்தித்தால்,மூன்று நாட்கள் இந்த மந்திரஜபத்தை நிறுத்திவைக்கவும்.

ஆன்மீக ஆராய்ச்சியாளர்களையும்,கடவுள் இல்லையென்று நம்பும் நாத்திகவாதிகளையும்,கடுமையான நோய் அல்லது கடன் அல்லது துன்பத்தில் உழலுவோர்கள் இந்த மந்திரஜபத்தை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கலாம்;

விரைவான,நிறைவான,அபரிதமான பலன்கள் வேண்டுவோர்,இந்த மந்திரஜபத்தை திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது ஜபிக்க வெகுவிரைவான தீர்வு கிடைக்கும்;கிரிவலம் சாதாரண நாட்களிலும் செல்லலாம்;
சதுரகிரிக்குச் சென்று கோவிலின் சன்னதியில் ஒருநாள் முழுக்கவும் எதுவும் சாப்பிடாமல் (தண்ணீர் அருந்தலாம்) இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கலாம்.
இப்படிச் செய்த அடுத்த சில நாட்களிலேயே உங்களது மாபெரும் பிரச்னைகள் தீர்ந்துவிடும்;அல்லது தீர்வதற்கான உதவிகள் கிடைக்கும்.

இந்த இரண்டு இடங்களுக்கும் செல்ல இயலாதவர்கள்,உங்கள் ஊரிலிருக்கும் சிவாலங்களில் தினமும் மேற்கூறியபடி ஜபம் செய்துவரவும்.அமாவாசை,பவுர்ணமி,தமிழ் மாதப்பிறப்பு,மாத சிவராத்திரி நாட்களில் மிக அதிக நேரமாக ஜபம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்;