Tuesday, May 15, 2012

நேர்மையான சோப்புன்னா என்னம்மா?


நாமக்கல் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.சுதாகர் 2004 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் தயாரிக்கும் ஹமாம் சோப் விளம்பரத்தில் “ஹமாம் இருக்க பயம் ஏன்?” என்று விளம்பரம் செய்தது.இந்தக் குறிப்பிட்ட வாசகத்திற்கு ஏதுவாக 50 வார்த்தைகளில் வாசகம் அனுப்ப வேண்டும் என்றும்,அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 5 பேரின் குடும்பத்துக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.4999/- வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.வாசகம் எழுதி அனுப்புபவர்கள் ஹமாம் சோப்பின் உறையை இணைத்து அனுப்ப வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது.இது தமிழ்நாடு பரிசுத் திட்டத்தடைச்சட்டம் 1979 க்கு எதிரானது.எனவே,இது போன்ற வாடிக்கையாளரைக் கவரும் வியாபார உத்திக்கு தடைவிதிக்க வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு:
தவறான வியாபார உத்தி குறித்து2(1)(ஆர்),3(ஏ) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது அந்தப்பிரிவின் படி ஒரு பொருளை வியாபாரம் செய்யும்போது பரிசோ,அன்பளிப்போ வழங்குவதாக நிறுவனம் அறிவித்துவிட்டு,அதன் மூலம் அந்நிறுவனத்துக்கு ஏதாவது ஆதாயம் வருமானால் அது தவறான வியாபார உத்தியாகும்.இதுபோன்ற வியாபார உத்தியில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.


இதை எதிர்த்து ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டு மனுவை மாநில நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் எம்.தணிகாசலம்,உறுப்பினர் வாசுகி ரமணன் ஆகியோர் விசாரணை செய்தனர்.விசாரணை முடிவில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தும்,மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் மாநில நுகர்வோர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 12; பிப்ரவரி 2011

1 comment:

  1. இன்று நாம் பயன்படுத்தும் சோப்பு, தலை
    எண்ணை, ஷாம்பூ ,டூத் பேஸ்ட் ,சலவைத்தூள் ,பால் பவுடர் ,மினரல் வாட்டர் ,போன்ற அனைத்து உடலுடன் ஒட்டி உறவாடும் பொருட்களையும் மேற்கண்ட யுனிலீவர் நிறுவனமே தயாரிக்கிறது.அது நமது மக்களின் பணத்தை உழைப்பை அட்டை போல உறிஞ்சிகிறது.குறைந்தபட்சம் நமது ஆண்மிகக்கடல் நண்பர்களாவது அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தும் முன்பு சிந்தித்து பார்க்க வேண்டும் முடிந்தால் தேவைகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி கொள்ளலாம்.இதன்மூலம் நமது இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete