Saturday, May 19, 2012

அபூர்வமான வைகாசி அமாவாசையை ஓம்சிவசிவஓம் ஜபிக்கப் பயன்படுத்திக்கொள்வோம்!!!


ரிஷபராசியில் ஸர்ப்பக் கிரகமான கேது இருக்கிறார்;அதேராசியில் தற்போது ஆத்மக்காரகனாகிய சூரியனும்,தனக்காரகனாகிய குருவும் இருக்க,20.5.12 ஞாயிறு அன்று மனக்காரகனாகிய சந்திரனும் சேருகிறார்கள்.

சூரியனும்,சந்திரனும் சேரும் நாள் அமாவாசை ஆகும்.இந்த கிரகத்துடன் ராகு அல்லது கேது சேர்ந்தால்,அதுவே கிரகணமாக பரிணமிக்கிறது.இந்த கிரகண நாளில்,கிரகண நேரத்தில்,சூரியனும்,சந்திரனும் ஸர்ப்பக்கிரகத்தின் பிடியில் குறிப்பிட்ட நேரம் வரை அகப்படுகிறது;அப்போது இந்த இரண்டு கிரகங்களின் சக்தியையும் (தற்காலிகமாக) உள்வாங்கி ராகு அல்லது கேது வெளியிடுகிறது.இந்த நேரத்தை பெரும்பாலான மந்திரவாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.ஏனெனில்,இந்த நேரத்தில் எந்த ஒரு மந்திரத்தையும் முறைப்படி ஜபித்தால்,அந்த மந்திரத்துக்கு பல கோடி மடங்கு சக்தி உண்டாகிவிடும்.

தவிர,இந்த நந்தன வருடத்தின் வைகாசி மாத அமாவாசை கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்படுகிறது.கார்த்திகை நட்சத்திரத்தைப் பற்றி இங்கே விவரித்தே ஆகவேண்டும்.

சூரியன் உச்சமாகும் நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகையை ஒரு விழா நாளாக கொண்டாடும் வழக்கம் தமிழ்நாட்டின் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.இந்த கார்த்திகை நாளில்,செவ்வாயின் அதிதேவதையாகிய முருகக்கடவுளை அவரது இருப்பிடத்தில்(முருகன் கோவில்கள்) சென்று வழிபடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது.ஜோதிடப்படி,கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் கால் பாகம் ரத்தராசியான மேஷத்திலும்,மீதி மூன்று கால் பாகம்  சுக்கிலராசியான ரிஷபத்திலும் அமைந்திருக்கிறது.எனவே,கார்த்திகை நட்சத்திர நாளில் நாம் முருகக்கடவுளை வழிபட்டுவந்தால்,நமது முதுமைக்காலத்தில் நமது ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்கும்;நமது வாழ்க்கையின் இறுதிநாள் வரையிலும் முழு ஆரோக்கியத்துடன் இருப்போம்;இப்படி ஆரோக்கியமாக இருக்க ரத்தமும்,சுக்கிலமும்(பெண்களுக்கு சுரோணிதம்) உதவும்.இந்த ரத்தமும்,சுக்கிலமும் சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்க கார்த்திகை நட்சத்திர நாளில் முருகக்கடவுள் வழிபாடு காரணமாக இருக்கும்.

இப்பேர்ப்பட்ட கார்த்திகை நட்சத்திர நாளில்,நாம் நமது வீடு அல்லது முருகக் கடவுளின் சன்னதி அல்லது சதுரகிரி அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்குள் மஞ்சள் துண்டு விரித்து,இரு கைகளிலும் தலா ஒரு  ருத்ராட்சத்தை வைத்து,கைகளை மடக்கி மனதுக்குள் ஒரு மணிநேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இதன் மூலமாக நமது கர்மவினையின் பெரும்பகுதி அழிந்துவிடும் என்பது ஜோதிட நிச்சயம்.


இந்த வைகாசி மாத அமாவாசை 20.5.12 ஞாயிறு அன்றும்,சூரியக்கிரகணம் 21.5.12 திங்கட் கிழமை விடிகாலை(ஞாயிறு நள்ளிரவு) 2.26க்குத் துவங்குகிறது;அப்படித் துவங்கும் சூரியக்கிரகணம் காலை 8.19க்கு நிறைவடைகிறது.நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நேரம்(முழு சூரியக்கிரகணம் உண்டாகும் நேரம்) திங்கட்கிழமை விடிகாலை 3.36 முதல் காலை 7.09 வரையிலான நேரம் ஆகும்.இந்த நேரத்தில் குறைந்த பட்சம் 30 நிமிடமும்,அதிகபட்சம் ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.


அபூர்வமான சூரியக்கிரகண நேரத்தை நாம் பயன்படுத்தி,நமது கர்மவினைகளை போக்குவோம்;இப்படி குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது கஷ்டங்கள் நீங்குவதோடு,நமது வருமான அளவு உயரும்;நமது நீண்டகால ஏக்கங்கள் தீரும்;நமது ஆத்ம பலம் அதிகரிக்கும்;நமது முன்னோர்களில் ஏழு தலைமுறை வரை(நமது அம்மா,அப்பா அவர்களின் அம்மா,அப்பாக்கள் என்று ஏழு தலைமுறை) கதிமோட்சம் உண்டாகும்.
நமது குழந்தைகளுக்கும்,அவர்களின் குழந்தைகளுக்கும் சேர்தே நாம் ஆத்ம பலத்தைச் சேமிக்கிறோம்.

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

சூரியக்கிரகணத்தை வீடியோவில் பார்க்க இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment