Monday, May 14, 2012

இந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை!!!


தூத்துக்குடியில் பிரபலமான இந்து பள்ளிக்கூடம் சுப்பையா வித்யாலயா.அப்பள்ளியில் ஆசிரியையாகவும்,பின் தலைமை ஆசிரியையாகவும் இருந்து மாணவர்களின் நலனுக்காகவே திருமணம் செய்யாமல் தன்னை அர்ப்பணித்தவர் பொன்னுத்தாய் டீச்சர்!

ஒரு முறை சித்பவானந்த சுவாமி அந்தப் பள்ளிக்கு வந்தபோது, “சமுதாயத்திற்காக வாழ வேண்டும்;ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்” என்று கூறியது எட்டாம் வகுப்பு மாணவி சரஸ்வதி மனதில் ஆழமாகப் பதிந்தது.தானும் பொன்னுத்தாய் டீச்சரைப்போலவே ஆகவேண்டும் என சரஸ்வதி முடிவு செய்கிறாள்.

எம்.ஏ.,பி.எட்., படிப்பை முடித்து தான் படித்த சுப்பையா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து தலைமை ஆசிரியையாகவும் ஆகிறார் சரஸ்வதி.
அரசு அங்கீகாரம் பெற்ற இந்துப்பள்ளியான சுப்பையா வித்யாலயாவிற்காக தான் திருமணம் செய்து கொள்ளாமலேயே அந்தப் பள்ளியைச் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு படிப்புடன் அன்பையும்,பண்பையும் வழங்குகிறார் சரஸ்வதி.
சுப்பையா வித்யாலயா நிர்வாகம் அந்தப் பள்ளியில் ஆங்கில மீடியம் துவக்குகிறது.மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கத் துவங்குகிறது.இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்த சரஸ்வதி டீச்சர்,தனது இருபதாண்டு பணியை முடித்து விருப்ப ஓய்வு பெறுகிறார்.அவரது தோழி பொன்ரதியும் விருப்ப ஓய்வு பெறுகிறார்.

தூத்துக்குடியிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் உள்ள ஊர் கூட்டாம்புளி.கூட்டாம்புளியைச் சுற்றி எல்லா கிராமங்களிலும் கிறிஸ்தவப்பள்ளிக்கூடங்களே உள்ளன.அந்தப்பகுதியில் மதமாற்றம் நடைபெறுவதைக் கண்டு பொறுக்காத இருவரும் தமக்கு ஓய்வின்போது கிடைத்த பணத்தைக்கொண்டு கூட்டாம்புளியில் 7 ஏக்கர் இடம் வாங்கிக் குடிசை போட்டு அங்கு தங்குறார்கள்.கிராமங்களில் பண்பாட்டு வகுப்பு,டியூசன் செண்டர்,இந்து சமய நிகழ்ச்சிகள் மூலம் ஆன்மீக சேவையைத் துவக்குகின்றனர்.

கூட்டாம்புளி ஊரிலேயே தமிழ்மீடியம் பள்ளி  ஒன்றையும் துவக்குகிறார்கல்.சில நன்கொடையாளர்கள் மூலம் கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. ‘இமயம்’ என்ற அறக்கட்டளை மூலமாக தொண்டும்,தமிழ் மீடியம் பள்ளியும் நடைபெறுகிறது.
6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 200 க்கும் மேற்பட்ட நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் அந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள்.

சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளும் அரசு நிதியுதவி பெற்றது ஆகும்.சரஸ்வதி டீச்சர் அரசு நிதியுதவி இல்லாதபோதும்,அரசு பள்ளி போலவே மக்களின் ஒத்துழைப்போடு நடத்துகிறார்.

ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்து வருகிறார்.மதியம் இலவச சத்துணவு அளித்து வருகிறார்.இலவச நோட்டு,புத்தகம்,சீருடை வழங்கி வருகிறார்.
தயானந்த சரஸ்வதி சுவாமியின் எய்ம் ஃபார் சேவா அறக்கட்டளை மூலம் மாணவிகளுக்கு இலவச விடுதியும் நடத்தப்பட்டுவருகிறது.

சரஸ்வதி டீச்சர் தன்னிடம்படித்த முன்னாள் மாணவர்கள் மூலமாக அவர்களாகக் கொடுக்கும் நன்கொடையை வைத்து,அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை விட சிறப்பாக நடத்திவருகிறார்.
அந்த சுற்றுவட்டார கிராமங்களில் மதமாற்றம் தடுக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல்,இந்து ஆன்மீக நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம் ஆகும்.
65 வயதாகும் சரஸ்வதி டீச்சரின் இந்தப்பணி தொடர பிரார்த்திப்போம்!!!

1 comment: