Thursday, May 31, 2012

நமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாமும் டிவியை தலைமுழுகுவோம்!!!


கோயம்புத்தூரில் டிவிக்கள் விற்கும் கடை வைத்திருக்கும் அஜய்குமார் தன் வீட்டு டிவியை மூன்று மாதங்களுக்கு முன் விற்றுவிட்டார்.அவருடைய 3 வயது மகள், ‘டிவியில் எனக்குப்பிடித்த நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தால்தான் சாப்பிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லுகிறாள்.பார்த்தார்! எவன் எவனோ எங்கிருந்தோ இருந்துகொண்டு எனது மகளின் அறிவுவளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து தடை போட,அதை நான் ஏன் ஏற்றுக்கொள்ளணும்? என்று யோசித்து தனது வீட்டில் இருந்த டிவியை விற்றுவிட்டார்.
இதே போல கோவையில் இதுவரை 35 பேர்கள் தங்கள் வீட்டு டிவியை விற்றுவிட்டார்கள்.டிவி இல்லாமல் தங்கள் குழந்தைகள் வளர வேண்டும் என்பது இவர்களது ஆசை. ‘என் பிள்ளைகள் படம் வரைவது, பாட்டுப்பாடுவது, மற்ற பிள்ளைகளோடு கூடி விளையாடுவது என்று இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்’ என்கிறார் அஜய்குமார்.

‘என் சின்னஞ்சிறு மகன் டிவியில் வரும் அடிதடி காட்சிகள் ஒன்றுவிடாமல் பார்க்கிறான்.அது அவன் மனதை பாதிக்கிறது.சிறுவர்களுக்கான சேனல்களும் மோசம்தான்!’ என்கிறார் மருந்துக்கம்பெனி நிர்வாகி சேதுராமன்.எனவே,இவரும் தனது டிவியை விற்றுவிட தீர்மானித்துவிட்டார்.
சிவானந்தா காலனியில் ‘எல்லோ ட்ரைன்’ என்ற மழலையர் பள்ளி நடத்தும் சந்தியா விக்ரம் தனது பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோர் தங்கள் வீட்டில் டிவி இல்லை என்று உறுதிமொழி அளிப்பதை நிபந்தனையாக வைத்திருக்கிறார்.இதற்கு அருமையான பலன் கிடைத்தது.எங்கள் பள்ளி பிள்ளைகளின் பெற்றோர் டிவி பார்ப்பதை நிறுத்தினார்கள்.அடுத்து அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கூட!!
நன்றி:த டைம்ஸ் ஆப் இந்தியா 24.2.12;விஜயபாரதம் பக்கம் 17,தேதி 30.3.12
ஆன்மீகக்கடலின் கருத்து: 1995 ஆம் ஆண்டில் நாம் உலகமயமாக்கலில் கையெழுத்திட்டோம்;1995 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் நாம் வீட்டுக்கு வீடு கேபிள் டிவி கொடுத்துக்கொண்டிருந்தோம்;அதே ஐந்தாண்டுகளில் அமெரிக்காவில் ஏப்ரல் முதல் வாரத்தை டிவி பார்க்காத வாரம் என்று கொண்டாட ஆரம்பித்தார்கள்.
ஏன் தெரியுமா?
உலக நாடுகளின் அரசுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராடுவது அமெரிக்காவும்,சீனாவும் இன்னும் பிற வல்லரசு நாடுகளும்!
இந்த வல்லரசு நாடுகளை இயக்குவது இந்த நாடுகளின் உளவுத்துறையும்,ஆயுத தயாரிப்பாளர்களும்,வியாபாரிகளும்;இவர்களது யுகம் முடிந்துவிட்டது;இப்போது இந்த வல்லரசு நாடுகளையும்,ஐ.நா.சபை அமைப்புகளையும் இயக்குவது சர்வதேச கார்பரேட் நிறுவனங்களும்,அதன் கொள்(ளை)கை வகுப்பாளர்களும்தான்!!!

1 comment:

  1. மிகவும் அருமை பதிவு

    நானும் டிவியை பார்ப்பதை நிறுத்தி விடுகிறேன் விட்டிலும் பார்ப்பதை தவிர்க்க முயற்சிக்கலாம் என்று நினைக்கிறன் .

    ReplyDelete