Tuesday, May 29, 2012

சனிப்பிரதோஷம் & ரிஷபப்பிரதோஷத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!


சனிப்பிரதோஷமும்,ரிஷபப்பிரதோஷமும் இந்த 2.6.12 சனிக்கிழமை அன்று வருகிறது.

இந்த அரிய அபூர்வமான நன்னாளில் முதன் முதலில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாமல் தவிப்பவர்களும் இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;


ஐந்து முகருத்ராட்சங்கள் இரண்டு,ஒரு மஞ்சள் துண்டு,சிவாலயத்தில் நமது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு வாங்கப்பட்ட விபூதி அல்லது தெய்வீக விபூதி பயிற்சி வகுப்பில் பெறப்பட்ட  விபூதி இவைதான் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தேவையான அருட்சாதனங்கள்.


அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட வேண்டும்;2.6.2012 சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் நமது வீடு அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஏதாவது ஒரு தனியிடத்தில் இந்த மஞ்சள் துண்டினை(வசதியிருந்தால் மஞ்சள் பட்டுத்துண்டு) வடக்கு நோக்கி விரிக்க வேண்டும்;விரித்து நமது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி மஞ்சள் துண்டின் மீது அமர வேண்டும்;அப்படி அமர்ந்த பின்னர்,நமது உடலின் எந்த பாகமும் தரையில் நீட்டிக்கொண்டு இருக்கக் கூடாது;(அப்படி இருந்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தி பூமிக்குப் போய்விடும்)


முதலில் நமது குலதெய்வத்தை வழிபட வேண்டும்;மனதுக்குள் ஓம் முனீஸ்வராய நமஹ(இது எனது குலதெய்வம்) அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;அடுத்து நமது நியாயமான கோரிக்கை ஏதாவது ஒன்றை மட்டும் நினைக்க வேண்டும்;(உதாரணமாக எனது அனைத்துக் கடன்களும் இந்த வருடத்துக்குள் தீர்ந்துவிட வேண்டும்)பிறகு ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் என்று நிதானமாக மனதுக்குள் ஜபிக்க வேண்டும்;விடாமல் ஜபிக்க வேண்டும்;


முதல் ஒருமாதத்திற்கு தினமும் 10 அல்லது 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;
அடுத்த மாதத்தில் அதாவது 2.7.12 முதல் 2.8.12 வரை தினமும் 20 அல்லது 30 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;
3 வது மாதத்தில் ,அதாவது 2.8.12 முதல் 2.9.12 வரை தினமும் 40 அல்லது 60 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்.
2.8.12 முதல் நமது ஆயுள் முழுக்கவும் தினமும் 60 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்;


அனுபவப்படி பார்க்கும்போது,நாம் முதல் நாள் நமது வீட்டில் எந்த இடத்தில் அமர்ந்து ஜபிக்கிறோமோ,அதே இடத்தில் தினமும் ஜபித்தால் மந்திர சக்தி விரைவாக கைகூடுகிறது;


அனுபவப்படி பார்க்கும்போது,60 நிமிடம் வரை ஜபிக்கத் துவங்கும்போது ஒரே இடத்தில் தொடர்ந்து 60 நிமிடம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க சிரமமாக இருக்கிறது;எனவே,முதல் 30 நிமிடம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,பிறகு கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டுவிட்டு(10 நிமிடம் அல்லது 20 நிமிடம்)அடுத்த 30 நிமிடம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க நல்ல மந்திர ஜப அனுபவம் கிடைக்கிறது;


அனுபவப்படி பார்க்கும்போது,சில நாட்களில் நாம் தாமதமாக தூங்கி எழும்போது,அல்லது அதிக நேரம் செல்போனில் பேசிவிடுவதால்,60 நிமிடம் தொடர்ந்து ஜபிக்க நேரம் இருப்பதில்லை;அப்படிப்பட்ட சூழ்நிலையில் 108 முறை மட்டும் ஜபித்தால் போதுமானது;ஒரு நாளுக்கு 60 நிமிடம் ஜபிக்க வேண்டும் என்பது இலக்கு;சில நாட்களில் மட்டும் 108 தடவைக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது போதுமானது;


அனுபவப்படி பார்க்கும்போது,கடுமையான பிரச்னைகள் இருப்பவர்கள் அந்தப்  பிரச்னை தீரும் வரையிலும் தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்;இதனால் உங்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவிகள் கிடைத்து,அந்த கடுமையான பிரச்னைகள் தீர்ந்துவிடுகின்றன;


அனுபவப்படி பார்க்கும்போது,நான் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறேன் என்று உயிர் நட்பிடம் சொன்னாலே அடுத்த சில நாட்களுக்கு ஜபிக்க முடியாமல் போய்விடுகிறது;ஏனெனில்,உயிர் நட்பு என்று நாம்தான் நினைக்கிறோம்;ஆனால்,அந்த உயிர் நட்பின் பெரும்பாலானவர்/ள்கள் பொறாமையின் சொரூபமாகவே இருக்கின்றனர்;மேலும் அவர்களுக்குத் தேவைப்படும் நபராக மட்டுமே நாம் இருப்பதால் நமக்கு சிறிய உதவிகளைச் செய்துவிட்டு,நம்மை,நமது செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.



ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,நமது நட்பு வட்டம் மாறிவிடும்;நமது சிந்தனையில் மகத்தான மாற்றங்கள் தோன்றிவிடுகின்றன;நமது உள்ளுணர்வு முழுமையாகச்  செயல்பட்டுவருகிறது;நமது காரியங்கள் அனைத்தும் எந்தத் தடையுமின்றி வெற்றிபெறுகின்றன.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment