தினந்தோறும் உயரும் விலைவாசியால் இந்தியாவின் 121 கோடி பேர்களில் 120.5 கோடி இந்தியர்கள் படும் கஷ்டத்தை ஒரு பக்கத்தில் விவரிக்க முடியாது;மன்மோகன் துவங்கி,நமது முதல்வர் வரையிலும் தேசபக்தியும் கருணையும் கொண்டவர்கள் நமது நாட்டில் நமது தலைவர்களாக இருக்கிறார்களா?
ஓம்சிவசிவஓம் மட்டுமே துணையிருக்கிறது!!!
மாதக்கடைசி நாட்களான 25 ஆம் தேதி முதல் 30,31 ஆம் தேதி வரையிலும் சமாளிக்கும் குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தை ஒரு ஆண்டு வரையிலாவது இந்தியாவின் பெண் அரசியல் வாதிகளுக்கு உணர்த்திட வேண்டும்.சரி அது போகட்டும்.எதற்கு வீண் கற்பனை?
ஒரு குடும்பத்தில் ஒரு மகனும்,மகளும் பெற்றோரும்!
குடும்பத்தலைவரும்,குடும்பத்தலைவியும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.ஜபிக்கத் துவங்கும் முன்பாக இருந்த குடும்ப சூழ்நிலை இப்போது மெதுவாக மாறிவருகிறது.
ஒரு நாள் இந்த குடும்பத் தலைவர்,ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குகையில் தனக்கு இன்று ரூ.500/- கிடைக்க வேண்டும் என்ற சிற்ற்ற்ற்று கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினார்.ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு, அலுவலகம் புறப்பட்டுவிட்டார்.
நீண்ட நாட்களாக அவருக்கு வர வேண்டிய அலுவலகத் தொகை( பயணப்படி) ரூ.512/- அந்த நாளில்,அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஒப்படைக்கப்பட்டது.அசந்தே போனார்.மாய்ந்து மாய்ந்து நம்மிடம் இந்த சாதனையைப் பகிர்ந்து கொண்டார்.
மாதக் கடைசி நாட்களில் இந்த ரூ.512/- எப்படியெல்லாம் கைகொடுத்தது? என்பதையும் என்னிடம் விவரிக்க எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.
என்ன நோக்கத்தோடு ஓம்சிவசிவஓம் வலைப்பூ துவங்கினேனோ,அந்த நோக்கத்தினை நான் தொட்டுவிட்டேன்.
எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை வந்துவிட்டது.
இந்த வலைப்பூவை நடத்துவதற்கு எனது நட்பு வட்டம் தேவையில்லாமல் இன்னொரு வலைப்பூவா? ஆன்மீகக்கடலையே ஒழுங்காக வளர்க்கப் பார் என சொன்னது எனக்கு நினைவில் நிற்கிறது.
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும்,இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை எனக்கு அறிமுகப்படுத்திய புளியங்குடி சிவ.மாரியப்பன்(எனது குருநாதர்) அவர்களுக்கும்(இவர் மிஸ்டிக் செல்வம் ஐயாவின் இறுதி நாள் வரை அவருடன் இருந்தவர்)எனது மற்றும் நமது ஆழ்ந்த கூகுள்(1க்குப் பின்னால் 100 பூஜ்யங்கள்) நன்றிகள்!!!
No comments:
Post a Comment