Saturday, April 21, 2012

thanks:dinamalar 20.7.11:


வாஷிங்டன் : "ஆசியாவில், சீனாவின் அரசியல் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவுடன் வலுவான தந்திர ராணுவ ஒப்பந்தங்களில், அமெரிக்கா ஈடுபட வேண்டும்' என, அமெரிக்க வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க, இந்திய உறவு தொடர்பான கட்டுரையில், அமெரிக்க அரசியல் வல்லுனர்கள் லிசா கர்டிஸ் மற்றும் டீன் செங், "ஆசிய நாடுகளில் மற்றும் கடல் எல்லைகளில், சீனாவின் அரசியல் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவுடன் வலுவான தந்திர ராணுவ ஒப்பந்தங்களில் அமெரிக்கா ஈடுபட வேண்டும்.

இந்திய கடல் பகுதிகளை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் ராணுவத்தை நவீனமாக்கும் பிரசாரத்திற்கு, அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய தொழில்நுட்பங்களை அளித்து உதவ வேண்டும். எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்வதில் இந்தியாவுடன் தொடர்ந்து, சீனா சிக்கலில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தெற்கு சீனா கடல் பகுதியிலும் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது' என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment