Saturday, April 21, 2012

திபெத் விவகாரம் வாய் திறந்தது அமெரிக்கா!:dinamalar 20.7.11


வாஷிங்டன் : ""சீனாவின் ஒரு பகுதி திபெத். ஆனால், சுதந்திரம் பெற அமெரிக்கா ஆதரவு அளிக்காது'' என, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வாஷிங்டனில், அமெரிக்க அதிபருக்கான வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய் கார்னி கூறுகையில், "திபெத் விஷயத்தில் அமெரிக்காவின் நிலை மாறவில்லை. சீனாவின் ஒரு பகுதி தான் திபெத். ஆனால், திபெத் சுதந்திரம் பெறுவதற்கு, அமெரிக்கா ஆதரவு அளிக்காது. திபெத்தின் தன்னிகரற்ற கலாச்சாரத்தை பாதுகாக்கவும் மற்றும் அம்மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அமெரிக்கா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

"சீனா, திபெத் இடையிலான நீண்ட கால பிரச்னையை தீர்த்துக் கொள்ளும் வகையில், இரு தரப்பிலும் பிரதிநிதிகள் சந்தித்து பேசுவதை, அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நோபல் பரிசு பெற்றவர். சர்வதேச அளவில், புத்தமதத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர். மற்ற நாட்டு அதிபர்கள் எப்படி அவரை சந்திக்கின்றனரோ, அதே அளவுகோலுடன் தான், அதிபர் ஒபாமாவும், தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார்' என்றார். வாஷிங்டனில், இந்த வார துவக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, தலாய் லாமா சந்தித்துப் பேசியதையடுத்து, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment