Saturday, April 21, 2012

ஆடி அமாவாசை(30.7.11)யைப் பயன்படுத்துவோம்;


இந்த கர வருடத்தில் ஆடி அமாவாசை சனிக்கிழமையன்று வருகிறது.சனி என்றாலே கர்மத்தின் அடையாளமே! பொதுவாக மகர,கும்ப லக்னம் அல்லது ராசியில் பிறந்தாலே முன்னோர்களின் கர்மாக்கள் குறிப்பிட்ட அளவைத் தாண்டிவிட்டன என்றே அர்த்தம்.

இந்த ஆடி அமாவாசையானது கர்மத்தை அழிக்கும் விதமாக சனிக்கிழமையன்று வருகிறது;சனிக்கிழமையன்று 30.7.11 காலை 7.14 முதல் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரமும் உதயமாகி மறு நாள் காலை வரையிலும் நிற்கிறது.இது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!!!

ஆமாம்! ராமேஸ்வரம்,திருச்செந்தூர்,கன்னியாகுமரி,விஜயாபதி,நாகப்பட்டிணம்,பாண்டிச்சேரி என கடலோரம் இருக்கும் கோவில்களுக்குச் சென்று கடலில் அன்று அதிகாலை 5.30 முதல் 6.00 மணி வரையிலும் மூன்று முறை மூழ்கி எழுந்து,ஏதாவது ஒரு காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்;அதன் பிறகு முடிந்தால்,அன்று பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல், ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;இந்த நாளில் காலை 9 மணிக்குள்ளும்,மதியம் 12 முதல் 2 மணிக்குள்ளும்,இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளும் அன்னதானம் செய்வோம்;

இதைச் செய்ய இயலாதவர்கள்,உங்கள் ஊரிலிருக்கும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று மாலை 4.30 முதல் 6.00 மணி வரையில் மஞ்சள் விரிப்பு விரித்து,இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சம் வைத்து ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;

இதுவும் செய்ய இயலாதவர்கள்,அண்ணாமலைக்கு வருகை தந்து,காலை 4.30 முதல் 6.00 மணிவரையிலும் கோவிலுக்குள்ளும்,மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் கோவில் வளாகத்தினுள்ளும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,இரவு ஏழு மணியளவில் கிரிவலம் செல்லலாம்.அப்படிச் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபித்துச் செல்லலாம்.

இந்த ஆடி அமாவாசைக்கு கிரிவலப்பாதையில் மஞ்சள் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்த ஒரு குழு கிரிவலம் செல்ல இருக்கிறது.அது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் வாசகர்கள் குழு!!! அனைவரும் வருக!!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment