Sunday, April 22, 2012

பெண்களும் ஓம்சிவசிவஓம் மந்திரமும்


தினமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபித்துவரும்போது,நாம் அமர்ந்திருக்கும் மஞ்சள் விரிப்பில் அந்த மந்திர அலைகள் பதிவாகியிருக்கும்.அதே சமயம்,நமது தலைக்கு மேலே இருக்கும் வான் காந்தப்பகுதிவரை நாம் ஜபிக்கும் மந்திர அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.ஒரு லட்சத்தைத் தொடும்போது,நமது பிறந்த மற்றும் ருது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள்,விபத்துக்களை உருவாக்கும் விதியை அழிக்கத்துவங்கும்.

இந்த சூழ்நிலையில்,பெண்களுக்கு மாதவிலக்கு ஐந்து நாட்கள் வரை வரும்.மிகச்சரியாக 28 நாட்களுக்கொரு முறை வந்தால்,அது ஆரோக்கியமான பெண் என சித்தமருத்துவம் தெரிவிக்கிறது.மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கு அளவற்ற மனக்குழப்பமும்,கோபமும்,விரக்தியும் ஏற்படும்.அந்த நாட்களில் பெண் உடல் இயல்பான நிலையை விட்டு,மிகவும் மென்மையானதான மாறும்.இதை ஒரு சினிமாப்பாட்டு வரி மூலமாக விளக்கலாம்.பூப்பறிக்க கோடாலி எதற்கு? என்ற வரி மூலமாக புரிந்திருக்கும்.அதாவது,மிகவும் மென்மையான உடலால்,மிகவும் சக்தி வாய்ந்த ,தெய்வீக அதிர்வைத் தாங்கிட முடியாது.

எனவே,பெண்கள் ஐந்து நாட்கள் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.கர்ப்பிணிப்பெண்கள் தாராளமாக ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.பிரசவித்த நாளிலிருந்து 45 நாட்கள் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை நிறுத்தவும்.எனக்குத் தெரிந்த ஒரு கர்ப்பிணி தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.தனது ஆறாவது மாதத்தில் இருந்து பிரசவ நாள் வரையிலும் ஜபித்துவந்ததால்,அவருக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டது.அவரது ஜாதகப்படியும்,அவர் கருத்தரித்த நாள்ப் படியும் அவருக்கு சுகப்பிரசவம் ஆகாது என்றே ஜோதிடம் கூறியிருந்தேன்.அதை அவரது பக்தி பூர்வமான ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் மாற்றிவிட்டது.இது ஒரு ஆச்சரியம் இல்லையா?

உடலுறவு கொண்டபின்னர்,குளிக்காமல் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே!மீறினால்,மன நிலை பாதிக்கப்படும்:எச்சரிக்கை $$$

ஒரு குடும்பப்பெண் முதல் நாளிரவு தாம்பத்யம் உறவு கொண்டு,மறு நாள் பகல் முழுக்க குடும்பக்கடமையைச் செய்துவிட்டு,குளிக்க நேரமில்லாமலும்,உறவுகொண்டதையே மறந்து ஜபிக்க ஆரம்பிக்க அவரது மனதில் குழப்பம் உண்டானது.உடனே,(ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்த ஒரே நிமிடத்தில் ) நிறுத்திவிட்டு குளிக்கப் போய்விட்டார்.இருப்பினும்,அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு தெளிவான மனநிலை இல்லாமலிருந்ததை அவர் உணர்ந்தார்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment