Saturday, April 21, 2012

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..! | Jul 23, 2011


I am a blogger , I am a blogger என்று  காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் , சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி ! மிகப் பெருந்தன்மையோடு , உங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இட வசதியாக , நீங்கள் கொடுத்திருக்கும்  " Post your comments "  வசதியால் வந்த வினை இது.

வாசகர்கள் பதிவை , நீங்கள் படித்துப் பார்த்து பின்பு publish பண்ணாமல்  - " {Comments Moderator - Enable பண்ணாமல்} , தானே உங்கள் வலைப்பூவில் சில பின்னூட்டங்கள் சென்று விடும். அந்த மாதிரி ஒரு வலைப்பூவில் , சென்று விழுந்த பதிவு - இன்று அந்த பதிவரை " CRIME BRANCH " என்கொயரியில் தள்ளி விட்டு இருக்கிறது..

நடந்தது இதுதான் :

வலைப்பூ மூலம் , கணிசமாக சம்பாதிக்கூடியவர் என் நண்பர் ஒருவர். பக்கா intellectual . well decent family . மிக சின்சியராக , ஒரு ஐந்து ப்ளாக் நடத்திக்கொண்டு இருக்கிறார்.எல்லாமே தரமான , இன்டர்நேஷனல் லெவெலில் ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் வருகிற "ப்ளாக்" குகள்.  வாசகர்கள் தாராளமாக தங்கள் பின்னூட்டங்களை பதிவு இடுவர்.  பெரிய , பெரிய பதிவர்கள் - ஏதோ ஒரு prestige issue போல - கமெண்ட்ஸ் களை " மாடரேட் " செய்யாமல் ஆட்டோ பப்ளிஷ் செய்து விடுகின்றனர். ஒரு அறியாமையில் இவரும் அதே போல் வைத்து இருக்கிறார்.

ஒரு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ தகராறு போல. அந்த பையன் , கொஞ்சம் வில்லங்கமாக அந்த பெண்ணைப் பற்றி  எழுதி , மொபைல் நம்பரும் போட்டு - பின்னூட்டத்தில் தட்டி விட்டுருக்கிறான். அதன் பிறகு,  தினமும் அந்த பெண்ணிற்கு - நூற்றுக் கணக்கில் அனாமதேய கால்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த  அந்த பெண் , கடைசியில் காவல் துறையில் ரிப்போர்ட் செய்ய , விஷயம் சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் க்கு சென்று இருக்கிறது..

அவர்கள் , இணையத்தில் தோண்டி துருவி ஆராய , நம்ம நண்பரின், வலைப்பூ, IP அட்ரஸ் , வீட்டு டெலிபோன் - என்று நெருங்கி , அவரது வீட்டில் வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கின்றனர்.

மன உளைச்சலில் , மிரண்டு போயிருக்கின்றனர்  நண்பரும், அவரது வீட்டில் உள்ளோரும்.. இப்போது உண்மையான குற்றவாளி யார் என்று போலீசும் , முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்... !

முதல்ல பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் , எனக்கு வடை னு சொல்லி , சொல்லி - அச்சடிச்ச சோறு ஆக்கிடப்போறாங்க... !

அதனால் , பதிவுலக நண்பர்களே ... நீங்களும் கொஞ்சம் உஷாராகவே இருங்க !
மன நோயாளிகள் இன்னும் இந்த உலகத்தில் அதிகம்.. உங்களையும் , அந்த மாதிரி ஆக்கிடப்போறாங்க..  உங்களால் முடிந்தவரை , உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்க...!!

புதிதாக வலைப்பூ தொடக்கி இருந்கும் நமது வாசகர்களே.. நீங்களும் அவசியம் தெரிஞ்சுக்கோங்க... !!

 நன்றி,

ரிஷி...



Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html#ixzz1TE4WsJm1

No comments:

Post a Comment