Saturday, April 21, 2012

அண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானமும்,நமது மறுபிறவியில்லாத முக்தியும்


காசியில் ஒருவருக்கு ஒரு நாளுக்கு(மூன்று வேளை) இடப்படும் அன்னதானமானது,மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு ஒரு நாளுக்குச் செய்யப்படும் அன்னதானத்தை விட உயர்வானது;

அண்ணாமலையில் ஒரு ஏழைக்கு ஒரு சாதாரண நாளில் செய்யப்படும் அன்னதானமானது,காசியில் ஒரு கோடிபேர்களுக்கு செய்யப்படும் அன்னதானத்தை விட உயர்வானது;(நல்ல வேளை அண்ணாமலை மெக்ஸிகோவிலோ,சைபீரியாவிலோ,ஆஸ்திரேலியாவிலோ இல்லை)

அதுவும் துவாதசி திதியன்று அண்ணாமலையில் மூன்றுவேளைகளுக்கு செய்யப்படும் அன்னதானமானது,அன்னதானம் செய்பவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறார்.மேலும் அவருக்கு மறுபிறவியில்லாத முக்தியை அவர் பெறுகிறார் என சிவமகாபுராணம் தெரிவிக்கிறது.

எனவே, ஆன்மீகக்கடல் வாசகர்களே! கர வருடத்தின் முழு துவாதசி திதி நாட்களை (மீண்டும்) வெளியிடுகிறோம்.நீங்கள் இந்த நாட்களில் ஏதாவது ஒரே ஒரு துவாதசி திதிநாளன்று திருஅண்ணாமலைக்குச் சென்று,மூன்று வேளைகள் அன்னதானம் செய்யவும்.
மதியவேளையில் கிரிவலப்பாதையில் இருந்தாலும்,கிரிவலப் பயணத்திலும் அன்னதானம் செய்யலாம்.
அசைவ அன்னதானம் செய்யக்கூடாது;கட்டாய அன்னதானம் செய்யக்கூடாது;வீடுவாசல் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால்,அது அன்னதானம் ஆகாது.நள்ளிரவில் அன்னதானம் செய்யக்கூடாது.

கர வருடத்தின் முழுமையான துவாதசி திதி நாட்கள்:

27.7.2011 புதன்

10.8.2011 புதன்

24.9.2011 சனி

8.10.2011 சனி

22.11.2011 செவ்வாய்

21.12.2011 புதன்

5.1.2012                        வியாழன்

4.2.2012 சனி

18.2.2012 சனி

3.4.2012 செவ்வாய்

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment