எடுத்த காரியம் எதுவும் நல்லவிதமாய் முடியவில்லையே.. இனி வாழ்வில் தோல்வி மட்டும் தானா? என்று எண்ணுபவர்களுக்கு - ஹனுமனை நினையுங்கள்.. ஹனுமனை மனதில் தியானியுங்கள்.. ! தினமும் காயத்ரி மந்திரத்தை ஒரு அரை மணி நேரமாவது ஜெபம் பண்ணுங்கள். செய்து விட்டு அன்றைய தின வேலைகளை ஆரம்பியுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் காயத்ரி ஜெபம் - உங்கள் வீட்டின் அத்தனை தோஷங்களையும் நீக்கி, உங்களுக்கு மிகப் பெரிய உந்துதலை தந்து - உங்களை முன்னேற்றும்.
ராமாயணம் நிஜமா? சேது பாலம் உண்மையா ? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளையில் - இந்த நிகழ்ச்சி உங்கள் நம்பிக்கையை மென்மேலும் அதிகப்படுத்தி உங்களுக்கு இறை நம்பிக்கையை ஏற்படுத்தும் ...
இது ஒரு 100 சதவீதம் உண்மை நிகழ்ச்சி. நம்புவதும், நம்பாததும் உங்கள் இஷ்டம் ! படித்த பிறகு - உங்களுக்கு புரியும்.
என்னுடைய கம்பெனியில் டில்லியை சேர்ந்த நண்பர் - பெயர் தீபக் தோன்க்ரே சொன்ன உண்மை சம்பவம் இது. அவர், மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கொஞ்ச வருடங்கள் பணி புரிந்தவர். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அவருக்கு பொய் சொல்லித்தான் பொழைப்ப நடத்தணும்ங்கிற அவசியம் இல்லை. முக்கியமா என்னை முட்டாளாக்கனும்கிற அவசியம் இல்லை.
இது நடந்தது ஒரு இருபது வருஷம் முன்னாடி. அவரது நண்பர்கள் இருவர் (Mr. Goyal & Mr. Kapoor) நேபாள் டூர் போயிருந்தாங்களாம். சொந்த கார்லேயே - டெல்லி லே இருந்து நேபாள் போயிருந்துருக்காங்க. இமாலயத்துலே பனி படர்ந்த மலை பிரதேசத்துலே ஒரு மத்தியான நேரம். செல் போன் அதிகம் புழக்கத்திலே இல்லாத காலம். கையிலே ஒரு நல்ல காமிரா மட்டும் இருந்து இருக்கு.
நடந்து போறப்போ - கொஞ்ச நேரத்துலே ரெண்டு பேரும் தனித்தனியா பிரிஞ்சுட்டாங்க. அதுலே கோயல் ஒரு சின்ன குகைக்குள்ளே போயிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வெளியே வந்து இருக்கார். ஒரு இடத்திலே சைலெண்டா உக்காந்துட்டாராம் . அங்கே , இங்கே தேடி - ஒருவழியா கபூர் இவரை தேடி கண்டுபிடிச்சு , ரெண்டு பேரும் நேபாள் லே - தங்கி இருந்த லாட்ஜ் க்கு திரும்பி இருக்கிறாங்க. ஆளு , ஆனா ஒரு மாதிரியாவே இருந்து இருக்கிறாரு. ஒரு வார்த்தை கூட பேசலை. முகத்தைப் பார்த்தாலே ஒரு மாற்றம் தெரிஞ்சு இருக்கு. அவர் வாய் திறந்து எதுவுமே பேசலையாம். ஏதோ ஒரு அதிர்ச்சிலே இருந்த மாதிரியே பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு இருந்து இருக்காரு..
சரி , நீ பின்னாலே படுத்து தூங்குனு சொல்லிட்டு - கபூர் கார் எடுத்து தானே ஓட்டி கோயல் வீட்டுலே இறக்கி விட்டுட்டு போய்ட்டாராம். இவர் வீட்டுக்கு வந்து , பூஜை ரூம் லே உக்கார்ந்தவர் தான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வெளியே வந்து, மனைவி , பசங்க தலையை ஆசீர்வாதம் பண்ற மாதிரி தடவி கொடுத்துட்டு -"ஜெய் ஸ்ரீ ராம்" னு மட்டும் சொல்லிட்டு , அவர் தூங்குற ரூமுக்கு போய் படுத்தவர் தான்,
மறுநாள் , காலைலே கபூர் வீட்டுக்கு போன். "உங்க நண்பர் கோயல் இறந்துட்டாரு. இரவு , தூக்கத்திலேயே மாரடைப்பு. சீக்கிரம் வாங்க."
அலறி அடிச்சு , அவர் வீட்டுக்கு போய்ட்டு துக்கத்திலே கலந்துக் கிட்டு வந்துட்டாராம். ஏன்? எதற்கு? என்ன ஆச்சு.. ஒண்ணுமே யாருக்குமே புரியலை.. ரொம்ப நாள் கழிச்சு , அவர் காமிராவைப் பார்த்திட்டு அவர் பையன் பிலிம் டெவலப் பண்ணி , பிரிண்ட் போட்டு இருக்காரு. கடைசியா அதுலே எடுத்த போட்டோ--- பனி படர்ந்த பின்புலத்தில் , கண்களை திறந்தபடி , எதார்த்தமாக நின்ற ரூபத்தில் சாட்சாத் அந்த ஆஞ்சநேயன். பெருமானே!! நினைச்சாலே புல்லரிக்குது!
ஹனுமனும், அவரும் சந்திச்சப்போ - என்ன நடந்தது தெரியலை. படங்கள் எடுத்துக்கிட்டே போனப்போ, எதேச்சையா யாரோ ஒருவர் இருக்கிறாரேனு போட்டோ எடுத்து இருக்கலாம். ஆனா, எல்லாம் யூகம் தான். அந்த போட்டோ ஆதாரம் தவிர....
இதுலே முக்கியமா குறிப்பிடத்தக்க விஷயம் - அந்த கோயல் ஒரு தீவிர ராம பக்தர். அந்த குடும்பமே , அவருக்கு ஆஞ்சநேய தரிசனம் கிடைச்சு அவருக்கு முக்தி கிடைச்சதா நம்புறாங்க. அவங்க பசங்க ரெண்டு பேரும் I.A.S. அதிகாரிகள். நல்ல நிலைலே குடும்பம் இருக்கு. இன்னைக்கும் அதிகாரம், ஆணவம் இல்லாம , இறை கைங்கரியங்களுக்கு நிறைய உதவி செய்றாங்க. அந்த குடும்பத்தோட எல்லா வளர்ச்சிக்கும், அவங்க அப்பாவோட ஆத்மாவும், அவரோட ஸ்ரீ ராம ஜெபமும் தான்னு திடமா நம்புறாங்க. இந்த விஷயமும் அவங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் தெரியுமாம்.
அதனாலே , நான் சொல்ல வர்றது என்னனு கேட்டீங்கன்னா.. சிரஞ்சீவியாக இன்னும் அந்த ஹனுமான் இருக்கிறார். நீங்கள் மனமுருக வேண்டினால் , உங்களுக்கு வரும் தொல்லைகள் அனைத்தும் பறந்து போகும். எங்கெல்லாம் ராம காதை ஒலிக்கிறதோ , அங்கெல்லாம் நான் வருவேன் என்று கூறி இருக்கும் அந்த சிரஞ்சீவியை , மனத்தால் நினைத்து , உங்களால் முடிந்த வரை நல்ல காரியங்களை மட்டுமே செய்து வாருங்கள். அந்த ஹனுமனும் நிஜம், ராமாயணமும் நிஜம் என்கிற பட்சத்தில் - அந்த சிவமும் , சக்தியும் சர்வ நிஜம்.
மனிதனாக பிறந்தது - நம் கர்ம வினைக்கேற்ப நமது சுக துக்கங்களை அனுபவிக்கவே. மனதளவில் திருந்தி , இனிமேலாவது நம்மால் முடிந்த வரை புண்ணிய காரியங்களையே செய்து வாருங்கள். நமது பூர்வ ஜென்ம பாவங்கள் முழுவதுமாக குறைந்து , நமது சந்ததிக்கே அது பெரிய பலம் கொடுக்கும் !
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்கள் - உங்களுக்கு அந்த ஹனுமானின் பரிபூரண அருள் கிடைக்க உதவும்.
ஸ்ரீ ராம ஜெயம் !
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்
1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||
2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||
3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||
4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||
5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
————-
ப்ரார்த்தனா மந்த்ரம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
————-
கார்ய சித்தி மந்த்ரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||
-————-
நமஸ்கார மந்த்ரம்
ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||
—————-
ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!
——
ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்
ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
————
ஆஞ்சநேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
————-
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்
-—————
ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
—————
ஸ்ரீ ஹனுமத் கவசம்
அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீராமசந்த்ரருஷி: |
காயத்ரீச்சந்த: |
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |
மாருதாத்மஜ இதி பீஜம் |
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |
ஸ்ரீராமதூத இதி கீலகம் |
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||
ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||
ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||
ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||
நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||
நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||
புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: ||
வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||
குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||
ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||
அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||
ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||
த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||
அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||
அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||
ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||
ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||
ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||
முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீஹநுமான் சாலீஸா
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||
ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||
ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||
மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||
கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||
ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||
சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||
வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||
ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||
பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||
லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||
ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||
ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||
ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||
ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||
தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||
தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||
ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||
துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||
ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||
ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||
ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||
பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||
நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||
ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||
ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||
ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||
சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||
ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||
அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||
ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||
தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||
அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||
ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||
ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||
ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||
ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||
ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||
துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||
பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||
================================================================
Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_19.html#ixzz1ScVBRz9x
No comments:
Post a Comment