அமித் வைத்யா என்பவர் அமெரிக்காவில் பிறந்து,பொருளாதாரத்தில் பி.எச்.டி.,பெற்று
27 ஆம் வயதிலேயே பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டியவர்;கோடிகளைக் குவித்தவர்;
அவரது அப்பா இறந்த சில மாதங்களுக்குப் பிறகு,தற்செயலாக மருத்துவப் பரிசோதனை
செய்தபோது,புற்றுநோய் அவருக்கு இருப்பது தெரிந்தது;
எனவே,நியூயார்க்கில் புகழ்பெற்ற மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை
எடுத்துக் கொண்டார்;அம்மாவுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அவர் இறந்தார்;அதன் பிறகு
மீண்டும் புற்றுநோய் குடலில் இருந்து நுரையீரல் வரை பரவியது;பெற்றோருக்கு ஒரே மகனாகிய
அவருக்கு தனிமை வாட்டியது;மருந்து,மாத்திரைகளை உடல் தனிமையின் கொடுமையால் ஏற்க மறுத்தது;மருத்துவர்களும்
சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று அமித் வைத்யாவிடம் தெரிவித்தனர்;
இதனால் தனது பெற்றோர்களைப் பார்க்கப் போவதாக மனதைத்தேற்றிக் கொண்டு மரணத்தை
எதிர்கொள்ளத் தயாரானார் அமித் வைத்யா;
இறப்பதற்கு முன்பு தனது உறவினர்களை சந்திக்க பாரதம் வந்தார்;உறவினர்களில்
ஒருவர் குஜராத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று வழிகாட்டினார்;இறப்பின்
விளிம்பில் இருக்கும் அமித் வைத்யா குஜராத் சென்றார்;அங்கே யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை
தரப்பட்டது;வெறும் வயிற்றில் நாட்டுப் பசுவின் பால்,தயிர்,நெய்,பசும் சாணம் மற்றும்
கோமயம்(பசுவின் சிறுநீர்) அடங்கிய பஞ்சகவ்யம் தரப்பட்டது;
கீமோதெரபியில் அத்தனை சுவைகளையும் இழந்த அமித் வைத்யா அதை தினமும் அருந்தினார்;சில
நாட்களில் பரவிக் கொண்டிருந்த புற்றுநோய் பரவாமல் இருப்பதை மருத்துவ அறிக்கை சொன்னது;இதனால்,தொடர்ந்து
40 நாட்கள் அங்கேயே தங்கி சிகிச்சையைத் தொடர்ந்தார்;ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி
சிகிச்சை பெற்றார்;சில நாட்களில் புற்றுநோய் குறைந்திருப்பதை மருத்துவ அறிக்கைத் தெரிவிக்க,இவருக்கு
ஆச்சரியம் தாளவில்லை;அதுவரை நடப்பதற்கே சிரமப்பட்டவர் நடக்கவும்,ஓடவும் ஆரம்பித்தார்;18
மாதங்களில் புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டு புதுப்பிறவி எடுத்தார்;
தான் பெற்ற இன்பம் பெறுக இப்பாரதம் என்பதற்கு ஏற்ப ஹீலிங் வைத்யா என்ற
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் துவங்கி,புற்றுநோயாளிகளை குணப்படுத்தும் சேவையைச் செய்ய
ஆரம்பித்திருக்கிறார்;
No comments:
Post a Comment