Monday, October 19, 2015


சேமித்த பணம்,இருமுறை சம்பாதிததற்குச் சமம்;இந்தியாவின் குடும்ப உயிர்நாடியாக இருப்பது சேமிப்பு தான்;முதலீடு எல்லாம் அப்புறம் தான்;

சேமிப்பும்,முதலீடுமே நம்மைச் செல்வந்தராக்கும் வழி!
பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்;(20% உழைப்பில் 80% வருமானம் பார்க்கும் கலை அது);

நாம் பணம் பெருமளவில் புழங்கும் இடத்திற்கு அடிக்கடி போய்வர வேண்டும்;

முதுமையில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள நமது பணம்,பெரும் துயரத்தைத் தரும்;

செல்வச்செருக்குடையவர்கள் தங்களது உடமையை மட்டுமல்ல;உள்ளத்தையும் கூட அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்;

கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை;

தயவுசெய்து எவரிடமும் கடன் படாதீர்கள்;நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை “ஐயா” என்று அழைக்க வேண்டியிருக்கும்;

No comments:

Post a Comment