உலக வரலாற்றிலேயே அரசியல் கட்சி ஆரம்பித்த ஒன்பதாவது மாதமே ஆட்சியைப்
பிடித்தது நமது பாரத தேசத்தில் தான்!
அந்த அரசியல் கட்சி தெலுங்கு தேசம்;
அந்தக் கட்சியை ஆரம்பித்தவர் என்.டி.ராமராவ் அவர்கள்;
அது எப்படி இவரால் மட்டும் முடிந்தது?
ஆந்திரமாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ராமர் கோவிலாவது இருக்கும்;இவர்
நடித்தத் திரைப்படங்களில் ராமராக நடித்தார்;எனவே,ஆந்திர மாநிலமக்கள் இவரை கலியுக ராமராகவே
போற்றி,அரியணையில் அமரவைத்தனர்;அவர்களின் பக்தியுணர்வே திரு.என்.டி.ராமராவை ஆந்திரமாநிலத்தின்
முதலமைச்சராக்கியது;
இவரது ஆஸ்தான ஆலோசகராக ஒரு ஜோதிடர் இருந்தார்;அவரைக் கலந்து ஆலோசிக்காமல்
திரு.என்.டி.ராமராவ் எந்த ஒரு முக்கிய சந்திப்பையும் நிகழ்த்துவது இல்லை;அதே ஜோதிடரை
இவர் ஜோதிடத்துறை மந்திரியாகவும் ஆக்கி அழகுபார்த்தார்;உலக வரலாற்றில் ஜோதிடத்துறையை
உருவாக்கியது ஆந்திரமாநிலமே! அந்த ஜோதிடர்,ஜோதிடத்துறை மந்திரியாக 2 ஆண்டுகள் வரை பணியாற்றினார்;
அவரது மருமகனாக இருப்பவர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள்;
ஆந்திரமாநிலத்தின் தலைநகராக அமராவதி நகரைத் தேர்ந்தெடுத்து,22.10.2015
அன்று(விஜயதசமி அன்று தான்) அடிக்கல் நாட்டிட
இருக்கிறார்;இந்த நிகழ்ச்சிக்காக பாரததேசத்தில் இருக்கும் அனைத்து மாநில முதலைச்சர்கள்,தலைமைச்செயலாளர்களையும்
அழைக்க முடிவு செய்திருக்கிறார்;
பாரதப் பண்பாட்டின் ஒரு அங்கமாக இருக்கும் வாஸ்துவுக்கு அவர் கொடுக்கும்
மரியாதைக்கு நாம் தலைவணங்குவோம்;
ஆந்திரமாநிலமும்,மாநில மக்களும்,அதன் முதலமைச்சர் திரு.சந்திரபாபுநாயுடு
அவர்களும் சகல வளங்களும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment