உத்திரப்பிரதேசமாநிலத்தில் பிறந்து,நமது அண்ணாமலையில் ஐக்கியமாகிவிட்டவர்
விசிறிச்சாமியார் அவர்கள்;இவர் ஒருமுறை மட்டுமல்ல;பல முறை கேரளாவில் இருக்கும் ஆனந்த
ஆஸ்ரமத்திற்குச் சென்றவர்;அங்கே ஆனந்த ஆஸ்ரமத்தை ஸ்தாபித்த ராமதாஸ் சுவாமிஜியை சந்தித்து
ஆசி பெற முயன்றிருக்கிறார்;அவர்தான் இவரை பிச்சை எடு என்று ஆசி கூறியுள்ளார்;
அவரது வார்த்தைகளாலேயே விசிறிச்சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று அடிக்கடி
சொல்ல ஆரம்பித்தார்;அண்ணாமலையாரை அப்பா என்றே அழைத்துக் கொள்ளத் துவங்கினார்;
பாரத தேசம் என்பது எனது நாடு; எனது ‘அப்பா’வின்(அண்ணாமலையாரின்) பூமி;இப்பிச்சைக்காரனின்
(விசிறிச்சாமியார்) இதயம்;புண்ணிய பூமி;வேத பூமி;இப்பிச்சைக்காரனின் விளையாட்டு மைதானம்;
நமது பாரததேசம் செழித்தோங்கி,அண்டசராசரத்திற்கு எல்லாம் வழிகாட்டும்;ஒவ்வொரு
துறையிலும் பாரதம் பிற நாடுகளுக்குத் தலைமையேற்று நடத்தும்;அண்டம் முழுவதும் பாரதம்
சொல்லுவதையே கேட்கும்;
எல்லாத்துறைகளிலும் மற்ற நாடுகளுக்குப் பாதையினை,நல்லப் பாதையினை பாரதம்
காட்டும்;
அணு ஆயுதங்கள் போன்ற தீவினை ஆயுதங்களில் இருந்து நமது தாயகத்தை எனது
‘அப்பா’(அண்ணாமலையார்) காப்பாற்றுவார்;பாரதம் எந்தப் போரிலும் தாக்கப்படாதவாறு அவர்
பார்த்துக் கொள்ளுவார்;பாரதத்தின் மேல் எந்த ஆபத்தும் வந்து தாக்காமல் அவர் பார்த்துக்
கொள்ளுவார்;
உலகம் முழுவதற்கும் பாரதம் தலைமையேற்கும்;இந்துக்களின் சன்மார்க்கம்
உலகெங்கும் பரவும்;இது விரைவில் நடக்கும்;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!
No comments:
Post a Comment