Friday, October 16, 2015

ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதியணி சூலினி
   மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
   சங்கரி செளந்தரியே
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
   கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                      1

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக்
   காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரிரொளி மதியொளி
   தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
   மாலைகள் சூடிடுவாள்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                     2


சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச்
   சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
   பொருந்திட வந்தவளே
எங்குலம் தழைத்திட எழில்வடி வுடனே
   எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                     3


தணதண தந்தண தவிலொலி முழங்கிடத்
    தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர் ஒளி வீசிடக்
    கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப்
    பண்மணி நீ  வருவாய்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்சி                   4


பஞ்சமி பைரவி பர்வத புத்ரி
   பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
   கொடுத்தநல் குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
   சக்தியெனும் மாயே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                   5


எண்ணிய படி நீ யருளிட வருவாய்
   எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
   பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
   கவலைகள் தீர்ப்பவளே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி  காமாட்சி                 6


இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லை
    யென்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச்
   சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
   பழவினை ஒட்டிடுவாய்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                 7

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                 8


தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இந்த துக்க நிவாரண அஷ்டகத்தைப் பாட வேண்டும்;இப்படி 90 நாட்கள் பாடிவர நமது அனைத்து சோகங்களும் நம்மை விட்டு அகன்றுவிடும்;(அசைவம் இந்த நாட்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்);



இந்த 90 நாட்களும் இரவில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்தில்(பழமையான சிவாலயம் எனில்,அங்கே இருக்கும் அம்மன் சன்னதியில்) பாடி வர ஏழு தலைமுறையாக இருந்து வரும் சோகங்களும்,கர்மவினைகளும் தீர்ந்து,மன நிம்மதியும்,அன்னை பராசக்தியின் அருளும்,அவரவர்களின் குலதெய்வ ஆசியும் கிட்டும்;

No comments:

Post a Comment