Wednesday, October 14, 2015

பஞ்சலோகச்சிலைகளின் ரகசியம்



கோவில்களில் பஞ்சலோகச் சிலைகள் இருக்கின்றன;இவைகள் முற்காலத்தில்(சேர,சோழ,பாண்டியர்கள் அரசாட்சிகாலத்தில்) உருவாக்கப்பட்டன;

இவைகள் எதற்காக உருவாக்கப்பட்டன?
தெய்வீக சக்திகள்(இறைசக்திகள்) அனைத்தும் உயர்நிலை ஆவிகள்(Supreme Spirits)ஆகும்;அவைகளால் தரையில் காலூன்றி நிற்க முடியாது;அவைகள் வந்து சில நிமிடங்கள் வரை காலூன்றி நிற்பதற்காக உருவாக்கப்பட்டவையே பஞ்சலோகச் சிலைகள்:

அதென்ன பஞ்ச லோகச் சிலைகள்?
பஞ்ச = ஐந்து
லோக = உலோகம்
ஐந்து உலோகங்களை குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து உருக்கி வார்க்கப்படுபவையே பஞ்சலோகச்சிலைகள்;இந்த பஞ்சலோகத்தில் தங்கமும் ஒன்று;ஆனால்,0.001% சதவீத அளவில்தான் இவை கலக்கப்பட்டிருக்கும்;

விநாயகருக்குரிய பஞ்சலோகச்சிலைகளை வடிக்க ஒரு குறிப்பிட்ட திதியும் நட்சத்திரமும் சேரும் நாளில் தான் பொருத்தமானது;இல்லாவிடில்,சில்பசாஸ்திரப்படி அது தோஷமுள்ளதாகிவிடும்;

முருகக்கடவுளின் பஞ்சலோகச்சிலைகளை வடிக்கவும் ஒரு குறிப்பிட்ட திதியும்,நட்சத்திரமும்,லக்னமும் அமைய வேண்டும்;
இதேபோலத்தான் அம்மன்,சதாசிவன் பஞ்சலோகச்சிலைகளும்!

இந்தத் தகவல் இன்னும் ஹாலிவுட் இயக்குநர்களுக்குத் தெரியாது;தெரிந்தால் பைரேட்ஸ் ஆப்
த கரீபியன்;அவதார் போன்ற திரைப்படங்களை விடவும் அட்டகாசமான ஒரு திரைப்படத்தை தயாரித்து சில ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துவிடுவர்;

தமிழ் திரைப்பட இயக்குநர்கள்?
அவர்கள் நமக்கு காதலிப்பது எப்படி? என்று மட்டும் சொல்லித்தரவே படம் இயக்குகின்றனர்;இது மாதிரி வெட்டி வேலை பார்ப்பதில்லை;


No comments:

Post a Comment