ஒரு நாளில் ஒரு மனிதர் சுவாசிக்கின்ற உயிர்க்காற்று(Oxygen) மூன்று பிராணவாயு
சிலிண்டர்களுக்குச் சமமானது ஆகும்;ஒரு பிராணவாயு சிலிண்டரின் விலை ரூ.700/-என்று மதிப்பிட்டால்,ஒரு
நாளுக்கு ரூ.2100/-ஆகிறது;ஒரு வருடத்தில் ரூ.7,66,500/-ஆகிறது;65 வயது வரை ஒரு மனிதனுக்குத்
தேவைப்படும் மதிப்பு ரூ.5,00,00,000/-ஆகிறது;
இவ்வளவு மதிப்பு மிக்க உயிர்க்காற்று(oxygen) எங்கிருந்து கிடைக்கிறது?
நம்மைச் சுற்றியுள்ள மரங்களிடம் இருந்து தான்!
ஒரு அரசமரம் தன்னைச் சுற்றி அரை கி.மீ.பரப்பளவுக்கு காற்றைத் தூய்மைப்படுத்தி,பிராணவாயுவை(உயிர்க்காற்றை)த்
தரும் பணியைச் செய்கிறது;இதனால் தான் என்னவோ,நமது முன்னோர்கள் ஒவ்வொரு மரத்தையும் ஒரு
கடவுளாக மதித்தனர்;
நம்மில் மிகச் சிலருக்கே மரங்களைப் பற்றிய மதிப்பு தெரிகிறது;
காரணம்
மெக்காலெ கல்வித்திட்டத்தை கிறிஸ்தவ ஆங்கிலேயன் நமது நாட்டின் கல்வித்திட்டமாக கட்டாயப்படுத்தியும்,திணித்தும்
நமது செழிப்பான பாரம்பரியத்தில் இருந்து நம்மைப் பிரித்து 300 ஆண்டுகள் ஆகிவிட்டன;
அதனால்
தான்,தற்காலத்தில் பெற்றோரை மதிக்காமல் இருக்கும் சுபாவம் நாடு முழுக்கப் பரவிவிட்டது;தனது
மகன்/ளைப் பற்றி பெற்றோர்களே இழிவுப்படுத்தும் பழக்கமும் சகஜமாகிவிட்டது;ஒருவனுக்கு
ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற நமது பண்பாட்டு ஆதாரம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது;
No comments:
Post a Comment