ஒருவேளை உண்பவன் யோகி(துறவியாக வாழ்பவர்!)
இருவேளை உண்பவன் போகி(நம்மைப் போன்ற குடும்பஸ்தர்!!)
மூன்று வேளை உண்பவன் ரோகி(நோயாளி!!!) மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிடுபவர்கள் ஏதாவது ஒரு நோயின் தாக்கத்துக்கு ஆளாவர்கள் என்பது இதன் விளக்கம்.
காலை =இஞ்சி
கடும்பகல்=சுக்கு
மாலை =கடுக்காய் என்று ஒரு மண்டலம்(சுமார் 48 நாட்கள்) தின்றால் கோலை ஊன்றி குறுகி நடந்தவர்,கோலைவிட்டு குலாவி நடப்பாரே!
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சின வைத்தியமில்லை;இதையே வேறுவிதமாகவும் சொல்வார்கள்=சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை;சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;
வில்வப்பழம் தின்பார் பித்தம்போக;பனம்பழம் தின்பார் பசிபோக!!
கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?
************************************************************************** ஏழைக்கு ஏற்றது எள்ளுருண்டை!
பணக்காரனுக்கு ஏற்றது பருப்புருண்டை!!
இளைத்தவனுக்கு எள்ளு;கொழுத்தவனுக்கு கொள்ளு!!!
நன்றி:அவள் விகடன் பக்கம்16,வெளியீடு 11.9.12
No comments:
Post a Comment