இந்த வருடம் சனிப்பிரதோஷம் இன்றும்,27.10.12 அன்றும் வருகிறது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயத்துக்குச் சென்று நாம் பிரதோஷபூஜையில் கலந்து கொண்டால்,ஐந்து வருடங்களுக்கு சிவாலயம் சென்ற புண்ணியம் கிடைக்கும்.ஏனெனில்,பிரதோஷம் முதன்முதலில் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமையன்றுதான்.
இந்த சனிப்பிரதோஷ நாளில் பிரதோஷத்துக்கு நாம் பூஜை மற்றும் அபிஷேகப்பொருட்கள் வாங்கித் தருவோம்;பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்தில் நந்தி பகவானை நோக்கியவாறு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொள்வோம்;இரு கைகளிலும் ஐந்துமுக ருத்ராட்சம் வைத்துக்கொண்டு கண்களை மூடாமல் இந்த 90 நிமிடங்களும் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபிப்போம்;அப்படி ஜபிக்கும்போது நந்திபகவானின் கொம்புகளுக்கு மத்தியப் பகுதியை நோக்கியவாறு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;(உதடு அசையாமல் மனதுக்குள் சொல்வதை ஜபித்தல் என்று கூறுவார்கள்) இந்த 90 நிமிடங்களில் செல்போனை அணைத்து அல்லது அமைதிப்படுத்தி வைத்துவிட்டு,தனிமையாகவே இந்த சனிப்பிரதோஷத்தில் கலந்து கொள்வோம்;
இந்த விதமாக ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது மனதில் இருக்கும் தேவையற்ற பதிவுகள் நீங்கிவிடும்;தீய சக்திகள் மற்றும் பொறாமை சக்திகளின் தாக்கம் நம்மைவிட்டு கரைந்து ஓடிவிடும்.சிவாலயம் செல்ல இயலாதவர்கள்,அவரவர் இருப்பிடத்தில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து மஞ்சள் துண்டு விரித்து,இருகைகளிலும் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,மானசீகமாக நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் முன்பு நாம் கலந்து கொண்ட பிரதோஷத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து,நந்திபகவானின் கொம்புகளை மானசீகமாக நினைத்து ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;
இது வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,சிலபல காரணங்களால் இடையில் ஜபிக்கமுடியாமல் நிறுத்தியவர்கள் இந்த சனிப்பிரதோஷத்தில் மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கலாம்;
இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,15.10.12 திங்கட்கிழமை அன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வரும் குரு ஓரையில் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.இந்த ஆரம்பம் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும் என்பது உறுதி!!!
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment