நமது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது;நமது சூரியன் பால்வழி மண்டலத்தில் ஒரு சிறு துகளாக இருக்கிறது.இந்த பால்வழி மண்டலத்தின் குறுக்களவை கடக்க எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா? ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்.(ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ.வேகத்தில் பயணித்தால் நாம் ஒரு வருடத்துக்கு 9,00,000 கோடி கி.மீ.தூரத்தைக் கடந்திருப்போம்;அப்படி ஒரு லட்சம் வருடங்களுக்கு பயணித்தால் எத்தனை செக்ஸ்டில்லியன் கி.மீ.தூரம் இருக்கும்!!!)
நாம் வாழ்ந்து வரும் பால்வழி மண்டலம் இன்னொரு மையப்புள்ளியை சுற்றி வருகிறது.அந்த இன்னொரு மையப்புள்ளியானது,கன்னி ராசியைச் சுற்றி வருகிறது.இதுவரையிலும் நமது வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்;
இனி நமது இந்து தர்மத்துக்கு வருவோம்;மனிதன் ஒருவன் இறந்ததும்,அவனது உயிரை எம தூதர்கள்/சிவ தூதர்கள்/விஷ்ணு தூதர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.இந்த பயணம் ஒரு வருடம் வரையிலும் தொடர்கிறது;இந்தப் பயணத்தின் முடிவில் அந்த உயிர் ஒப்படைக்கும் இடம் கன்னி ராசியே!! எனவேதான் சூரியன் கன்னிராசியைக் கடக்கும் புரட்டாசி மாதத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் மஹாளய பட்சத்தை நாம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்;இந்தப் புரட்டாசியில் பவுர்ணமிக்கு மறு நாளிலிருந்து அமாவாசை வரும் தேய்பிறை காலமே மஹாளய பட்சம் ஆகும்.இந்த 15 நாட்களில் நமது முன்னோர்கள்,மேலுலகத்திலிருந்து நாம் வாழும் வீடுகளுக்கு வருகை தருகிறார்கள்.
இந்த மஹாளய பட்சத்தில் சதாசிவனின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.7.10.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 6.08 மணியிலிருந்து 8.10.2012 திங்கட்கிழமை காலை 8.14 வரை உதயமாகியிருக்கும்.இந்த காலகட்டத்தில்,7.10.12 ஞாயிறு மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலும்,மற்றும் 8.10.12 திங்கள் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் இராகு காலம் அமைந்திருக்கிறது.
இந்த இரண்டு காலத்தையும் நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப்போல பயன்படுத்த வேண்டும்;என்னவெனில்,நாம் வாழும் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;அங்கே ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து,மஞ்சள் துண்டு விரித்து,மூலவரை நோக்கியவாறு அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;வசதியுள்ளவர்கள் இந்த நேரங்களில் வில்வத்தால் அர்ச்சனை செய்யலாம்;அப்படிச் செய்யும் போதே ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;(உட்கார்ந்திருக்க முடியாவிட்டாலும்!!!)
கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,அவரவர் வீடு/தங்குமிடத்தில் (முடிந்தால் உயரமான இடத்தில்)வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;
இன்னும் முடிந்தால்,நமது வீட்டில் இருக்கும் சிவலிங்கம் போட்டோவின் முன்பாக(கிழக்கு நோக்கி) மஞ்சள் துண்டு விரித்து அமர்ந்து,வடக்கு நோக்கி வைத்திருக்கும் சிவலிங்கம் போட்டோவுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்;அப்படி செய்தவாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;இவ்வாறு ஞாயிறு இராகு காலத்திலும்,திங்கட்கிழமை இராகு காலத்திலும் அர்ச்சனை செய்தவாறு ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்தப்பின்னர்,கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்;குறைந்தது மூன்று துறவிகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அல்லது ஒரு கிலோ டையமண்டு கல்கண்டை அருகில் இருக்கும் முட்புதர்/காடு/பூங்கா/தோட்டம்/வனப்பகுதியில் தூவ வேண்டும்;
திங்கட்கிழமை காலையில் இராகு காலம் துவங்கும் முன்பாக ஆறு நாட்டு வாழைப்பழங்களை ஒரே ஒரு பசுவுக்கு தானமாகத் தர வேண்டும்.இதன்மூலமாக நமது முன்னோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்!!!
இந்த வழிமுறைகளை முறைப்படிச் செய்தால்,அடுத்த சில வாரங்களில் நமது நீண்டகாலப்பிரச்னைகள் தீர்ந்துவிடும்; செய்து பார்க்கலாமா?
ஓம்சிவசிவஓம்
வணக்கம் தஙகள்து பதிவுகளை படித்து அதன்மூலம் பயனடைந்து வரும் ஆயிரக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். அது தாங்களும் அறிந்ததே. அந்த வகையில் எமது கோடானுகோடி நன்றிகள்.
ReplyDeleteஇந்த பதிவில் நீங்கள் உபயோகபடுத்தி இருக்கும் படம் அற்புதம் ஆனால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை சற்று விளக்குவீர்களா? கடவுள் அணு சோதனைக்கும் நமது ஹிந்துத்துவத்திற்கும் என்ன சம்பந்த்தம்?
மேல்நாடுகளின் ஆராய்ச்சிகளின் வளர்ச்சி ஒரு கட்டத்துக்கு மேல் செல்லமுடியாமல் தவிக்கும்போது,அவர்களின் அறிவியல் சந்தேகங்களுக்கு விடைகள் நமது திருமந்திரம்,திருக்குறள்,வேதங்கள்,புராதனமான ஓலைச்சுவடிகளில் இருக்கின்றன.இதை அறிந்ததும் அவர்கள் தாமாகவே இந்து மதத்துக்கு மாறிவிடுகின்றனர்.இதை விளக்கும் படமே அது.அறிவியலின் முடிவு இந்து தர்மம்!!!
ReplyDelete