Saturday, October 20, 2012

தாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும் நவீன சிரவணன்.





சிரவனன் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அவரைப் போலவே இவர் நவீன சிரவணன். 

பிரம்மாச்சாரி என்ற இளைஞர், வயதான தன் தாயாரை தோளில் சுமந்து, கடந்த 12 ஆண்டுகளாக ஆன்மிகத் தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். 
மத்தியப் பிரதேசம் வார்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த, தனது பார்வையற்ற கீர்த்திதேவி 80 வயது தாயாரை கூடையில் சுமந்தபடி, 15 ஆண்டுகளாக ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளுகிறார் கைலாஷ் கிரி பிரம்மாச்சாரி. ஒரு பெரிய கழியில், இரண்டு கூடைகளைக் கட்டி தராசு போல் செய்து, ஒரு பக்கம் தாயையும், ஒரு பக்கம் தங்கள் உடைமைகளையும் வைத்து, தோளில் சுமந்தபடி,சென்ற ஆண்டு வரை காசி, சிர்ட்ராகுட், தாராபித், பாசுகிநாத் டாம் (ஜார்க்கண்ட்), தாராகேஷ்வர் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களுகளுக்கு சென்றுள்ளார். 

இது குறித்து பிரம்மாச்சாரி கூறிய போது, என் தாயாருக்கு கடவுள் பக்தி மிகவும் அதிகம். சிறுவயதில் நான் மரக்கிளையிலிருந்து விழுந்து, மிகப் பெரியளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்க, போதிய வசதி இல்லை. எனது தாய், தொடர்ந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டார். என்ன ஆச்சரியம், எந்தவித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல், விரைவிலேயே நான் பூரணமாக குணமடைந்து விட்டேன். எனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், எனக்கு பூரண குணமளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவும், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். எனது 24ம் வயதில் இந்த பயணத்தை தொடங்கினேன். 
மகன் படும் சிரமத்தைப் பார்த்து, யாத்திரை முடித்து விடுமாறு கீர்த்திதேவி கேட்டுக் கொண்டும், அதை முடிக்காமல் விடப் போவதில்லை என்பதில், பிரம்மாச்சாரி உறுதியாக இருக்கிறார். முதலில் இவரை பலரும் கிண்டல் செய்தனர். இப்போது, நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். இவருடைய தாய் பக்தியைப் பார்த்து, அவர் காலில் விழுந்து வணங்குகின்றனர். சாப்பாடு, தங்கும் இடம் கொடுத்து உதவுகின்றனர். 
பெற்றவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இன்றைய காலத்தில் இப்படியும் ஒருவரா? 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AmbgciMlXOk

1 comment: