நவராத்திரி நாட்களான ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒன்பது அன்னையாக வழிபாடு செய்து வருகிறோம்;இந்த ஒன்பது அன்னையையும் அவளுடைய சிவத்தோடு(சிவமும் சக்தியும் சேர்ந்ததே உலகம்!) வழிபட்டால் அதுவே நவராத்திரி பைரவ வழிபாடு ஆகும்.
நவராத்திரி பைரவ வழிபாடு செய்ய விரும்புவோர்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியிருக்க வேண்டும்;ஓம்சிவசிவஓம் தினமும் ஜபிப்பவர்களும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டினை தினமும் பின்பற்றுபவர்களும் அவைகளைப் பின்பற்றிக்கொண்டே இந்த நவராத்திரி பைரவ வழிபாட்டை செய்யலாம்;
முதல் மற்றும் இரண்டாம் நாட்களின் வெள்ளை ஆடையை அணிய வேண்டும்;மூன்றாம் நாளன்று மஞ்சள் நிற ஆடையையும்,நான்காம் நாளன்று கறுப்பு ஆடையையும்,ஐந்தாம் நாளன்று பச்சை நிற ஆடையையும்,ஆறாம் நாளன்று பல வண்ணம் கொண்ட பளபளப்பான ஆடையையும்,
ஏழாம் நாளன்று அடர்ந்த சிகப்பு நிற ஆடையையும்
எட்டாம் நாளன்று நீல நிற ஆடையையும்
ஒன்பதாம் நாளன்று ரத்த சிகப்பு நிற ஆடையையும்
பத்தாம் நாளன்று உங்களுக்கு விருப்பமான ஆடையையும் அணிய வேண்டும்.
இந்த பத்து நாட்களும் தினமும் தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்களுக்கு அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;சென்று ஒவ்வொரு நாளும் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.எப்படியெனில்,இந்த ஒன்பது நாட்களும் பின்வரும் உணவுப்பொருட்களை படையலாக நமது வீட்டில் தயார் செய்து,ஸ்ரீகால பைரவருடைய சன்னதியில் படைக்க வேண்டும்;அவ்வாறு படைத்து நமது குடும்பத்தார் அனைவரின் பெயர்களிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்து,பூசாரிக்கு உங்களால் இயன்ற அளவுக்கு தட்சிணை தர வேண்டும்.
பிறகு,ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் ஸ்ரீகால பைரவர் 108 போற்றியை ஒருமுறை மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.ஜபித்து முடித்ததும்,படையலை அங்கே இருப்பவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.(பாதியை விநியோகம் செய்தால் போதும்;சில கோவில்களில் ஆட்கள் அதிகம் வராத நிலையில் அனைத்தையும் நமது வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்)நமது வீட்டில் இருப்பவர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
இவ்வாறு முறைப்படி ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி பைரவர் வழிபாடு செய்து முடித்தப்பின்னர்,பத்தாவது நாள் நமது குடும்பத்தோடு வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும்.குடும்பத்தார் அனைவரும் வர இயலாத சூழ்நிலை இருந்தால்,யாராவது ஒருவரையாவது அழைத்து வர வேண்டும்.
இப்படிச் செய்து முடிப்பதன்மூலமாக,பதினோராவது நாளில் நமது முன் ஜன்ம வினைகள் அடியோடு தீர்ந்து போயிருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.
தினசரி நைவேத்தியம்(படையல்)விபரம் வருமாறு:
முதல் நாள் :அவல்+பொரிகடலை
இரண்டாம் நாள் :சுண்டல்
மூன்றாம் நாள் :தயிர்ச்சாதம்
நான்காம் நாள் :வெண்பொங்கல்
ஐந்தாம் நாள் :எலுமிச்சை சாதம்(லெமன்)
ஆறாம்நாள் :அவல்பாயாசம்
ஏழாம் நாள் :கற்பூரவல்லிப்பழங்கள்
எட்டாம் நாள் :வெண்ணெய்
ஒன்பதாம் நாள் :சர்க்கரைப்பொங்கல்
பத்தாம் நாளன்று வெண் பட்டு சாத்தலாம்.முடியாதவர்கள் வழிபாடு செய்தாலே போதுமானது.
இன்று இரண்டாம் நாள் என்பதால் இன்று முதல் இரண்டாம் நாள் வழிபாட்டிலிருந்தும் துவங்கலாம்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment