விழுப்புரத்தில் ஜய வருடம்,வைகாசி மாதம் 8 ஆம் நாள்,அனுஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி என்ற வேத விற்பன்னருக்கும்,ஸ்ரீமஹாலட்சுமி அம்மாளுக்கும் புதல்வனாக அவதரித்தவர் காஞ்சி பரமாச்சாரியார்.
இவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பிலவங்க வருடம்,சித்திரை மாதம் 27 ஆம் நாள் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,8.4.1994 அன்று முக்தியடைந்தார்.இன்றும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
பெரியவர் ஒரு முறை சம்ஸ்க்ருத கல்லூரியிலிருந்து மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.லஸ் கார்னரில் இவருக்கு கருப்புக்கொடி காட்டி பழிப்பதற்கென்று நாத்திகக் கூட்டம் கூடியிருந்தது.(அந்த முட்டாள் கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)
பெரியவருக்கு எதிரே வந்து கறுப்புக்கொடியை உயர்த்தி, ‘ஒழிக,ஒழிக சங்கராச்சாரியார் ஒழிக’ என்று அக்கும்பல் கோஷமிட்டது.அதைக் கேட்டுக்கொண்டே வந்த பெரியவர் நகரவில்லை;அவர் ஓடிவிடுவாரென எதிர்பார்த்த கும்பல் கத்தி கத்தி களைத்து ஓய்ந்தது.அதற்கென்றே காத்திருந்தவர் போல,அவர்களை அருகில் வரச் சொன்னார்.கும்பலுக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது.அவர் மகிமை அவர்களுக்கும் தெரியும்.ஆதலால் ஏதேனும் சபித்துவிடுவாரோ என்ற பயம்தான்.அதை தெரிந்துகொண்டு, “பயப்படாமல் அவர்களை வரச் சொல்லு” என்று மறுபடியும் சொன்னார்.எல்லோரும் அருகில் வந்தவுடன் இரு கைகளையும் தூக்கி, “நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்” என்று ஆசிர்வதித்தார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அந்நிய மதத்தவர்களுக்கு அறிவுரை
ஒரு பிள்ளையார் கோவிலில் பூப்பந்தலெல்லாம் போட்டு,மிக அழகாக அலங்காரம் செய்த அந்த புகைப்படங்களை ஒருவர் காஞ்சிப் பெரியவர் பார்வைக்கு எடுத்து வந்தார்.”இதற்கு உபயம் செய்தவர் ஒரு இஸ்லாமியர்!” என்றார்.
“அந்தப்பெரியவரை முடிந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லு” என்றார் காஞ்சிப் பெரியவர்.
இஸ்லாமியப் பெரியவர் காஞ்சிப்பெரியவரின் வார்த்தைகளைக் கேள்விப்பட்டு உடனே காஞ்சி மடத்துக்கு வந்தார்.
“இப்படி மத வேற்றுமை பாராட்டாமல் நல்ல காரியங்களுக்கு உதவுகிறீர்கள்.ஆனால்,உங்கள் மத அனுஷ்டானங்களை விடாமல் செய்து வருகிறீர்களா?” என்று காஞ்சிப்பெரியவர் அவரிடம் கேட்டார்.
அதற்கு அவரும், “எனக்கு நம்பிக்கை உண்டு; முடிந்தவரை விடாமல் பண்ணுகிறேன்” என்றார்.
எத்தனை முறை தொழுகை செய்வீர்கள்?
“ஐந்து முறை” என்றார்.
இல்லை;உங்களுக்கு ஆறுகாலத் தொழுகை உண்டு.உங்கள் நபிகள் நாயகம் அப்படித்தான் பண்ணி வந்தார்.ஆறாவது நடுநிசியில் பண்ண வேண்டிய தொழுகை.அந்த நேரம் ஜனங்கள் தூங்கிவிடுவதால் விட்டுப் போய்விட்டது போலும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி அவருடைய மதத்தைப்பற்றிய உண்மையை எடுத்துரைத்தார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்து சமுதாயத்தில் பிளவு,இந்த நாட்டுக்கே அழிவு!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1950 களின் தொடக்கத்தில் ஜாதி மோதல் நடந்தது.பெரிய அளவில் வன்முறை வெடித்தது.இந்தச் செய்தியைப் படித்த பெரியவர் ‘இந்து சமுதாயத்தின் இரு சமூகங்கள் மோதிக்கொள்வது நாட்டுக்கு நல்லதல்ல’ என்பதை உணர்த்துவதற்காக, வன்முறையால் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தாருக்கும் வேட்டி,சேலை,அரிசி,பருப்பு என்று நிவாரணப்பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்தார்.அதன் பிறகே ஆன்மீகக்கடமைகளை அன்றைய தினம் ஈடுபட்டார்.
இந்து ஒற்றுமைக்காக பாடுபடும் இந்து இயக்கங்களின் பலம் இருமடங்கானால் இந்தியாவில் ஊழல்,ஒழுங்கீனம் போன்றவை காணாமல் போய்விடும் என்பதால் ஒவ்வொருவரும் இந்து தர்மத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றார் பரமாச்சாரியார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழ் மொழியிலே கூட காஞ்சிப் பரமாச்சாரியாருக்கு இருக்கும் அறிவு முத்தமிழ் அறிஞர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ.விடம், “தமிழ் என்றால் என்ன?,சமஸ்க்ருதம் என்றால்,செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்.அப்படியானால் தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?” என்று பெரியவா கேட்டார்.
அதற்கு கி.வா.ஜ.அடக்கமாக, “நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார்.
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது.இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும் அழகும்,இனிமை அவற்றைக் குறிப்பதாக இருக்கும்.மழலை,குழல்,அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தமானவை.ஆகவே, ‘ழ’வைத் தம்மிடம் வைத்திருக்கும் தமிழ்(தமி+ழ்)என்று சொல்லலாமா?” என்று விவரித்தார்.உடனே,கி.வா.ஜ. ‘இதைவிடப்பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்’ என்கிறார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஆன்மீகக்கடலின் கருத்து: தமிழ்ப் பண்பாடுதான் இன்றைய இந்துப்பண்பாடு என்பதற்கான ஆதாரங்கள் தெய்வத்தின்குரல் என்ற புத்தகம் முழுவதும் நிரம்பியுள்ளன.தெய்வத்தின் குரல் என்பது காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்களின் பேச்சுக்களின் தொகுப்பு ஆகும்.
ஆக,தமிழ்,தமிழ் உணர்வாளர்கள் பிராமணரை எதிர்ப்பதும்,சமஸ்க்ருதத்தை வெறுப்பதும்,சங்கராச்சாரியாரை அவமதிப்பதும் பெற்ற தாயை இழிவுபடுத்துவதற்குச் சமம் என்பதே எனது கருத்து.
தமிழ் உணர்வாளர்கள் இப்படி எடுப்பார்க்கைப்பிள்ளையாகப் போனது ,அவர்களுக்கு இன்னும் தமிழின் தொன்மை பற்றிய போதிய ஞானமில்லை என்பதையே காட்டுகிறது.
சரியா?
ஓம்சிவசிவஓம்