மிகுந்த தெய்வ பக்தி உடையவர் சச்சின்.புட்டபர்த்தி சத்யசாயிபாபா மற்றும் திருப்பதி கோவில்களுக்கும்,இந்தியாவின் புராதன கோவில்களுக்கும் அடிக்கடி செல்வது அவரது வழக்கம்.
அண்மையில் புற்றுநோய்விழிப்புணர்வுக்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி கேட்டு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக் வேண்டுகோள் விடுத்தார் சச்சின் தெண்டுல்கர்.குவிந்தது ரூ.1,00,00,000/-
இவர் எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும் அதற்கு முன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச் ரேக்கரைச் சந்தித்து,ஆசி பெற்றுவிட்டுத்தான் செல்வார்.
ஒரு பீர் கம்பெனியின் விளம்பரத்தில் நடிக்க சச்சின் டெண்டுல்கரை அணுகியது.அதற்கு சம்பளமாக ரூ.20 கோடி தர சம்மதித்தது.சச்சின் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.அதற்கு சச்சின் சொன்ன காரணம்:என் ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.அவர்களை தீயப் பழக்கங்களில் இட்டுச் செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்.
ஆண்டு தோறும் 200 குழந்தைகளின் கல்விக்காக அப்னாலயா என்னும் அமைப்பின் மூலமாக உதவி செய்துவருகிறார்.
நன்றி:புதிய தலைமுறை 29.3.2012
.jpg)
nalla thagaval
ReplyDelete