![[agni.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggea-C1MTDibkGFwKTzRkTdUZnqyEsfj2nQqWEE6j5vx5WNaCP_zaZanJyXLJ71keaup4gcIkLeSvJkZymyjuBXgEAm_e8vsDpj8qmMRZyIuFhFxWhMlqMdilN0_q8rHUX1HRL6hPgLvFH/s1600/agni.jpg)
விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஆதாரம் 1
இன்றைய நவீன யுகத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுக்க பரப்பப்பட்டுவரும் எந்தவொரு நவீன தொழில்நுட்பமும் நன்மைகளைத் தருவதைவிட தீமைகளையே அதிகம் தருகிறது.உதாரணமாக, செல்போன் தொழில்நுட்பம்,இணையம் அதாங்க இண்டர்நெட்,எம்.எல்.எம் எனப்படும் பல்நிலை வர்த்தகம், கோலா எனப்படும் குளிர்பானங்கள் இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியின் பக்கவிளைவுகளை சரிசெய்ய இந்து தர்மத்தால் மட்டுமே முடியும்.அதற்குரிய ஆதாரங்களை மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து “உலக அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும்,போர்-இனவெறி இல்லாத உலகிற்கும் இந்துமதம் மட்டுமே காரணமாக இருக்கிறது.எதிர்காலத்தில் இந்துமதம் உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம் தேவைப்படும்” என கூறிவிட்டனர்.
இதற்கு ஆதாரமாக இரு உதாரணச்சம்பவங்களைப்பார்ப்போம்:
போபால் விஷவாயு விபத்து:
அமெரிக்காவின் வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனமான யூனியன் கார்பைடு தனது தொழிற்சாலையை நமது இந்துயாவில் மத்தியபிரதேச மாநிலத்தலைநகரான போபாலில் 1980 வாக்கில் நிறுவியது.உலகளவில் ஆபத்தான வேதித்தொழிற்சாலைகள் பெருநகரங்களில்நிறுவக்கூடாது என்பது சட்டம்.இந்த யூனியன் கார்பைடு ஒரு மாநிலத்தலைநகரத்திலேயே நிறுவப்பட்டது.
04.12.1984
யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் கழிவுவாயு கலன்கள் வெடித்துச்சிதறியது.விஷவாயு போபால் நகரம் முழுவதும் பரவ உடனே 12,000 பேர்கள் மரணம்.இன்று 2009 !!! 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த விஷவாயுப்பரவலால் கோரமான குழந்தைகள் பிறந்து கொண்டேஇருக்கின்றன. அந்த அமெரிக்க பிராடு கம்பெனி யூனியன் கார்பைடு முதலாளி வேறுஒரு கம்பெனிக்கு தனது யூனியன் கார்பைடை விற்றுவிட்டான்.இன்னும் பாதிக்கப்பட்ட நமது இந்திய சகோதர குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.என்ன கொடுமை?
சை போகட்டும்.நமது விஷயத்திற்கு வருவோம்.போபாலில் விஷவாயு பரவிய அந்த 4.12.1984 அன்று ஒரே ஒரு போபால் தெருவில் மட்டும் வாழும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் உண்டாகவில்லை.ஏன்? எப்படி?
அந்தத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவர் 1972 முதல் 12 வருடங்களாக அக்னிஹோத்திரம் என்ற சிறு அளவிலான ஹோமம் தினமும் வளர்த்து வந்திருந்தார்.காலையில் 30 நிமிடங்களும் மாலையில் 30 நிமிடங்களும் சூரிய உதயமாகும் நேரங்களிலும்,சூரிய அஸ்தமானமாகும் நேரங்களிலும் அக்னி ஹோத்திரம் செய்துவந்தார்.விஷவாயு பரவ ஆரம்பித்ததும் தனதுவீட்டில் அக்னிஹோத்திரம் செய்யத்துவங்கினார். இதனால் அவரது தெருமக்கள் சிறு உடல்பாதிப்பு இல்லாமல் இன்று வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த சம்பவம் அன்றைய தினசரிகளிலும் ,தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரசிலும் வெளிவந்தது.
அதன்பிறகு உலக அளவில் அக்னிஹோத்ரம் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டன.காற்றில் ஏற்படும் கடுமையான நச்சை முறிக்கும் தன்மை அக்னி ஹோத்திரத்திற்கு உண்டு என அறியப்பட்டது.வீட்டில் தினமும் அக்னி ஹோத்ரம் செய்து வந்தால் உடல் உபாதைகள் நீங்குகின்றன.மாணவர்கள் கல்வியில் சாதனைபடைக்கின்றனர்.பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர்.மன நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். எந்த நோயாக இருந்தாலும் விரைவில் மனிதனைவிட்டு நீங்குகின்றன.
இன்று நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யமுடியும்.விபரமறிய அருகில் உள்ள கதர்கடைகள், காதிபவன்கள்,காந்தியக்கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகள்,இந்துத்துவ அமைப்புகள்,இந்து மத சங்கங்களைத்தொடர்பு கொள்ளவும்.
http://www.hinduveda.org/ என்ற இணைய தளத்தைத் தொடர்புகொள்ளவும்.அல்லது கூகுளில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தையைக் கொடுத்துத் தேடவும்.
No comments:
Post a Comment