Thursday, April 27, 2017

தானம் பெறுவதில் கவனம் தேவை!!!




தினமலர் வாரமலரில் வைரம் ராஜகோபால் எழுதும் ஒருபக்க ஆன்மீகக் கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் பரவாயில்லை;இன்றிலிருந்தாவது வாசியுங்கள்;நாம் கவனக்குறைவாகச் செய்யும் ஒரு சிறு பிழையானது நமது வளர்ச்சியைத் தடை செய்யலாம்;

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது உண்மை;அதே நேரம் நமது தினசரி வாழ்க்கையில்  உயர்ந்தது நிதானம்.ஆம்,நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் நிதானமாக இருக்கப் பழக வேண்டியிருக்கிறது;நிதானத்தை பேச்சிலும்,சிந்தனையிலும்,வாகனம் ஓட்டுவதில்,படிப்பதிலும் பின்பற்ற வேண்டியிருக்கிறது;இல்லாவிட்டால்,நமது இழப்புகளை ஈடு செய்யவே இயலாது;


அன்னதானம் செய்கிறோம்;அதன் மூலமாக நமது கர்மவினைகளைக் குறைத்துக் கொள்கிறோம்;வீடு வாசல் இல்லாத அனாதைகள்,சாதுக்கள்,துறவிகளுக்கு இலவசமாக உணவு கொடுத்தால் தான் அது அன்னதானம் எனப்படும்;அசைவ உணவு கொடுத்தால்,அது அன்னதானமாக கருத முடியாது;நள்ளிரவில் அன்னதானம் செய்தால்,அது மஹாபாவம் ஆகும்.இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேல் நாமாக வலியச் சென்று அன்னதானம் செய்யாமலிருப்பது நல்லது;(அதே சமயம்,பசிக்கிறது என்று யார் எப்போது எந்த நேரத்திலும்,எந்த சூழ்நிலையிலும் கேட்டாலும்,உடனே அவர்களுக்கு நம்மால் ஆன உணவை வாங்கித் தராமல் இருப்பது பாவம்;)அன்னதானம் செய்பவர்,அவரே நேரடியாக செய்ய இயலாத போது,தனது ரத்த உறவுகளைக் கொண்டோ,தனது நம்பிக்கைக்குரியவர்களைக் கொண்டோ செய்யலாம்;


அன்னதானம் செய்பவரின் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் அவரோ,அவரது ரத்த உறவுகளோ,அவரது நம்பிக்கைக்குரியவரோ எவர் மூலமாகவும் அன்னதானம் செய்யலாம்;அல்லது எந்த கோவிலில் அன்னதானம் செய்கிறோமோ அந்தக் கோவிலின் மூலவரது ஜன்ம நட்சத்திர நாள் அல்லது திருவிழாக் காலம் அல்லது நமக்கு வசதிப்பட்ட நாட்களில் அன்னதானம் செய்யலாம்.அன்னதானம் செய்யும் முன்போ,செய்த பின்னரோ அதை விளம்பரப் படுத்தக்கூடாது;அன்னதானம் தானே என்று மலிவான உணவுப்பொருட்களைக் கொண்டு அன்னதானத்துக்கு உணவு சமைக்கக் கூடாது;மனதார அன்னதானம் செய்தால் மட்டுமே அதற்குரிய பலன்/பலன்கள் அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் நம்மை வந்து சேரும்.


அன்னதானம் செய்வதற்கு ஏற்ற இடங்கள்:உலக அளவில் முதலிடம் பெறுவது நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே அமைந்திருக்கும் அண்ணாமலை தான்!!! இதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது காசி என்ற வாரணாசி,கேதார்நாத்,பத்ரிநாத்,திருக்கையிலாய மலை ஆகும்.
இரண்டாம் இடத்தைப் பிடிப்பவை: தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயங்கள் அனைத்துமே!
மூன்றாம் இடத்தைப் பிடிப்பவை:அனாதை இல்லங்கள்,முதியோர் இல்லங்கள்
நான்காம் இடத்தைப் பிடிப்பவை:சித்தர்களின் ஜீவசமாதிகள்,மற்றும் துறவிகளின் ஜீவசமாதிகள்
ஐந்தாம் இடத்தைப் பிடிப்பவை: பசி என்று கேட்பவர்களின் இடங்கள்

அன்னதானம் செய்ய இயலாதவர்கள்,ஒரே ஒரு பழம் உடனே வாங்கிக் கொடுத்தாலும் அது அன்னதானத்துக்குரிய பலனைத் தரும்.பழம் கிடைக்காவிட்டால்,சாப்பிடக் கூடிய எந்த ஒரு தின்பண்டமாகவும் இருக்கலாம்;


வஸ்திரதானம் என்பது ஆடை தானம் ஆகும்.சாதுக்களுக்கு காவி நிற ஆடைகள்,துண்டுகள்,வேட்டிகள்,கனமான மற்றும் குளிர் உட்புகாத ஆடைகள் ஆகும்.நாம் தானம் தரும் ஆடையை அந்த சாது பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் நமது கர்மவினைகள் குறைந்து கொண்டே வரும்;


நீங்கள் எந்த ஒரு கோவிலுக்குச் சென்றாலும்,செல்லும்போதும், வழிபட்டுத் திரும்பும்  போதும்= உங்களோடு வருபவரே உங்களுக்கு ஒரு டீ/காபி/பழச்சாறு/குளிர்பானம்/உணவுப்பொருள் வாங்கித் தந்தால் அதற்குரிய பணத்தை நீங்களே தந்துவிடுங்கள்;அப்படித் தந்தால் தான் நீங்கள் அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டதற்கான பலன்கள் உங்களோடு வரும்;இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் சிறிதும் இரக்கமே படாதீர்கள்; அதே சமயம்,உங்கள் மீது பிரியப்பட்டு உங்கள் நண்பர்/உறவினர் ஒரு கோவிலுக்கு உங்களை அவரது வாகனத்தில் இலவசமாக அழைத்துச் சென்றால் அது தப்பில்லை;அப்படிச் செல்வதால் உங்கள் வழிபாட்டின் புண்ணியப்பலன்கள் அவரைச் சேராது;

ஒருவர்  தமது பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது பதவி உயர்வுக்கான மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நமக்கு ஆடை அல்லது துணிமணி எடுத்துத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம்;அந்த ஆடையை நாம் பயன்படுத்தும் வரையிலும்,நமக்குப் பரிசாக அளித்தவருக்கு நாம் செய்யும் புண்ணியம் போய்ச் சேராது;ஏனெனில்,அவர் நமக்கு அளித்திருப்பது தானம் அல்ல;பரிசு;அவரது மகிழ்ச்சியின் வெளிப்பாடு;


ஆனால்,ஒருவர் நமக்கு தூங்குவதற்கான போர்வை அல்லது படுக்கை அல்லது கட்டில் தானமாகக் கொடுத்தால் மட்டும் அதை ஒருபோதும் வாங்கக்கூடாது;கூடவே கூடாது;தானத்தில் வாங்கக் கூடாத தானம் படுக்கை தானம் மட்டுமே! நாம் தூங்கும் இடமான கட்டில் அல்லது போர்வை அல்லது படுக்கையை நாமே நமது உழைப்பின் மூலமாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால்,நமது புண்ணியச் சேமிப்பு கரைந்து போய்விடும்.நகரம்,கிராமம்,வெளிநாடு,சிறு நகரங்களில் வாழும் பலர் படுக்கை தானம் செய்துவருகிறார்கள்;எப்படி?


நாம் வாழும் கலியுகத்தில் கணவன்,மனைவியாகச் சேர்ந்து வாழ்பவர்களை விடவும்,பிரிந்து வாழ்ந்து வருபவர்களே அதிகம்;மேலும்,திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் ஆண்களும்,பெண்களும் பல லட்சம் பேர்களை எட்டுகிறது;மாநகரங்களில் தான் இந்த எண்ணிக்கை என்று இல்லை;ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் இந்த சூழ்நிலையே நிலவுகிறது.இந்த சூழ்நிலையில்,தனித்து வாழும் ஆண்களில் பலர் ஆன்மீகம்,ஜோதிடம் தெரிந்த பலரை தம்மோடு தமது இருப்பிடமான வீடு/ப்ளாட்/அறையில் சில நாட்கள் தங்க வைக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.அப்படி தங்க வைக்கும் நாட்களில் அவர்களை ஒரு குருவுக்குரிய மரியாதையுடன் நடத்தி,இரவு உணவை வாங்கித் தருகிறார்கள்;அப்படி வாங்கித் தந்த கையோடு தமது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று இரவில் தங்கவும் வைக்கிறார்கள்.இதுவும் ஒருவித நவீனமான படுக்கை தானமே! ஒரே ஊரில் வசித்துக் கொண்டு,நெருங்கிய நண்பர்களாகிய பின்னர்,தமது வீட்டில் தூங்காமல் ஒரு ஜோதிடர் தனது நெருங்கிய நட்பு வீட்டில் தூங்கினால்,அந்த நாள் முழுவதும் சேகரித்த புண்ணியம் படுக்கை தானம் செய்தவருக்கு உடனே போய்ச் சேரும் என்பது கடந்த ஏழு ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டறிந்த உண்மை ஆகும்.

ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment