பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.
பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment