Thursday, April 27, 2017

சித்தர்களின் சாதிக் கொள்கை:பாடல்களாக விளக்கம்


சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்
றோதி யுணர்ந்தறிவாய் , குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் (குதம்பைச் சித்தர் பாடல் 145)

ஆண்சாதி பெண் சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற வெல்லாம்  (குதம்பைச் சித்தர் 137)

பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு மும்முளே(சிவவாக்கியர் பாடல் 40)
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவேறில்லை (அகத்தியர் ஞானம் 4)

காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக் குலம்தான் மைந்தா
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத் தானே         (வான்மீகர் ஞானம் பாடல் 8)

நால்வருணன் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சாதியெலாம் பிள்ளை விளையாட்டே
சாதியும் மதமும் சமயமும்  பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணிந்தேன்(வள்ளலார் திருவருட்பா)

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளில் கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர்

சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ (பாம்பாட்டி சித்தர்)

சாதிபேதம் சொல்லுறீர் தெய்வம்
தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதியபால் அதில் ஒன்றாகி அதில்
உற்பத்தி நெய்தயில் மோராச்சு(கொங்கணர் வாலைக்கும்மி 94)

சாதிக் கொடுமைகளை எதிர்ப்பதையும்,சாதி வேறுபாடுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் சித்தர்களின் பாடல்கள் விளக்குகின்றன.

நாம் தான் அறிவாளி சமுதாயமாச்சே! கம்யூட்டர் யுகத்தில் வாழ்பவர்களாச்சே! சாதியை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தி,அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதோடு,மனித நேயத்தை கொன்றுவிட்டோம்.

அப்படிக் கொல்வதற்கு கிறிஸ்தவ ஆங்கிலேயனின்    மெக்காலே கல்வித் திட்டமும் ஒரு காரணமாகிவிட்டது.

No comments:

Post a Comment