Thursday, April 27, 2017

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”








‘காந்தி கொலையில் சாவர்க்கரின் கைவரிசை உண்டு’ என்று பாடும் பாட்டு புதிதல்ல;இதில் சாவர்க்கருக்கு சம்பந்தம் கிடையாதென்று நீதிமன்றமே விடுதலை செய்தது.காங்கிரஸ் ஏஜண்டுகளாக வாழும் சில புத்திசாலிகள் நம்பமுடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் கல் எறிந்து தேசபக்தியை காட்டினர்.சாவர்க்கரின் தம்பி நாராயணராவ் கல்வீச்சில் கடுமையாகத் தாக்கப்பட்டார்.அன்றைக்கு சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘இந்த கொலையில் சாவர்க்கரின் பங்கு இல்லை’ என்று நேருவிடம் கூறினார்.

இருந்தும் நேரு கேட்கவில்லை;1948 மார்ச் 11 ஆம் தேதி ஒரு குற்றவாளி ஆக்கப்பட்டார்.வழக்கறிஞர் போபட் அவர்களுக்கு விவரம் கிடைத்தது.வீரசாவர்க்கர் நிரபராதி என்று தனி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.மேல்முறையீட்டு முயற்சியை தைரியமில்லாமல் கைவிட்டார் ஜவஹர்லால் நேரு.



நாட்டின் முதல் குடியரசு நாளின் கொண்டாட்டத்திற்கு சாவர்க்கருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று நேரு நினைக்கவே இல்லை.பிரிட்டிஷ் அரசாங்கம் வசப்படுத்திக் கொண்ட சாவர்க்கரின் வீட்டை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை;ஆனால்,இதே நேரு 1950 ஏப்ரல் 4 இல் பாகிஸ்தான் தலைவர் லியாகத் அலி நம் நாட்டிற்கு வந்தபோது சாவர்க்கரை ‘சட்ட ஒழுங்கு’பிரச்னையைக் காரணம் காட்டி கைது செய்ய மறக்க வில்லை;



சாவர்க்கரின் நண்பர்கள் கவுரவபூர்ணமாக ‘ம்ருத்யுஞ்ச நாள்’ கொண்டாடியதை வானிலை ஒலிபரப்பு செய்யாமல் இருக்க நேரு தடுத்தார்.அந்தமான் செல்லூலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட அறையை தரைமட்டமாக்கிட முயன்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.கணேசவரின் எதிர்ப்பினார் கைவிட்டார் நேரு.சாவர்க்கரின் வாழ்நாளின் கடைசி நாட்களில்(இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும்) சி,ஐ,டிக்கள் வேலை செய்தனர்.



கடைசியில் 1966 பிப்ரவர் 26 அன்று சாவர்க்கர் வீரமரணத்தைத் தழுவியபோது கூட சவப்பெட்டி(கன் கேரேஜ்) கிடைக்காமல் செய்தவர் இந்த ஜவஹர்லால் நேரு.உடலைக் கொண்டு செல்ல கன் கேரேஜை ஏற்பாடு செய்தவர் சினிமா நடிகர் வி.சாந்தாராம் ஆவார்.சாவர்க்கரின் இறுதி ஊர்வலத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை; நாடாளுமன்றத்தில் ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தக்கூட அனுமதியளிக்க வில்லை;உறுப்பினரல்லாதவர்கள்(எம்.பி.இல்லாதவர்கள்) நாடாளுமன்றத்தில் கண்ணீர் அஞ்சலி செய்ய அவசியமில்லை என்றார் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் உக்கும் சிங்.



ஆனால்,ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் மரணமடைந்தபோது,இந்தியப்பாராளுமன்றம் கண்ணீர் சிந்தியது.இப்போது சொல்லுங்கள் நேரு போன்றவர்களே இப்படி சிறு மனப்பான்மையில் ஊன்றி இருந்தபோது,அவர் குடும்பத்தின் வாலாக இருக்கும் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் பேசியது தவறா?

‘விஸ்வேஸ்வரபட் நூற்றெட்டு பேச்சு’ பக்கத்தில் விஜயகர்நாடகா 16.9.2004.



நன்றி:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்148,எழுதியவர் பேராசிரியர் தச்சம்பட்டு திரு.கே.பழநி(கிரிவலப்பிரியன்) வெளியீடு:ராஷ்ட்ரீய சாகித்ய சங்கமம்,கேசவன்குடில்,தச்சம்பட்டு-606806.திருவண்ணாமலை மாவட்டம்.விலை ரூ.60/-

No comments:

Post a Comment