Tuesday, August 30, 2016

இணையம் வழியாக பொருட்கள் வாங்கும் வழிமுறை!!!



ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகத்துடன், மலிவு விலை பொருட்கள் எப்படி வாங்குவது? குறித்த சற்றே விரிவான கட்டுரைதான். பொறுமையாக படித்து நண்பர்களுடன் ஷேர் செய்து அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகப்படுத்துங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா? உங்களுக்குதான் இந்த கட்டுரை
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சுறுசுறுப்படைந்து கடந்த இரண்டு வருடமாக அதி வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தயங்கி வருகிறார்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் என்றால் ஒருவித பயம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் காரணங்கள்....
ஆன்லைன் ஷாப்பிங்-ல ஏமாத்திடுவான்.......பொருள் தரமா இருக்காது.... நேரா போய் தொட்டு பார்த்து வாங்குற மாதிரி வருமா?.....முகம் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்புறது எப்படி... கொண்டுட்டு ஓடிப் போயிட்டா.... மொபைல் வாங்குனா சோப்பு கட்டி அனுப்புவானாமே? தினத்தந்தில படிச்சேன்... என்று பலவித காரணங்கள், குழப்பங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறியாமையே இந்த குழப்பங்களுக்கு காரணம். அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற தளங்கள் நேரடியாக எந்த பொருளையும் விற்பதில்லை. நமது ஊர்களில் விற்பனையாளர்கள் கடை திறந்து இருப்பது போன்று அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற தளங்களிலும் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை விற்கின்றனர்.
விற்கின்ற பொருட்களில் குறிப்பிட்ட சதவீதம் ஷாப்பிங் தளங்களுக்கு செல்லும். நமது ஊர்களில் சில மோசடி விற்பனையாளர்கள் இருப்பது போன்று ஆன்லைன் தளங்களிலும் சில மோசடி பேர்வழிகள் ஷாப்பிங் தளங்களில் பொருட்களை விற்கிறார்கள். மோசடி செய்ய முயல்கிறார்கள். உதாரணத்திற்கு மொபைல் வாங்கினால் சோப்பு கட்டி அனுப்புவது போன்று.
நீங்கள் புகார் செய்யும் போது ஷாப்பிங் தளங்கள் மோசடி பேர்வழிகளை கண்டறிந்து தடை செய்கின்றன. உங்களுக்கு சரியான பொருளை அனுப்பியும் வைக்கின்றன. அதனால்தான் சந்தையில் நிலைத்து நிற்கின்றன. ஏமாற்று தளங்கள் என்றால் இவை இந்தியாவில் நிலைத்திருக்க முடியாது.
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் இளைஞர்கள் மட்டும் தான் என்று இருந்த காலம் மாறி அனைவரும் சரளமாக கம்ப்யூட்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இணையமா...? பேஸ்புக்கா...? நமக்கெல்லாம் ஒத்து வராது என்று ஓடியவர்கள், பிரபலங்கள் எல்லாம் இன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் வெளுத்து வாங்குகிறார்கள். இதெல்லாம் இல்லேன்னா நம்ம பொழப்பு ஓடாது என்று நிலைக்கு வந்து விட்டார்கள்.
ஏன்?
இவை எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று ஆகி விட்டது. ரேஷன் கார்டுல பேர் இல்லாதவர்களை கூட காணலாம்.... பேஸ்புக் / வாட்ஸ் அப் அக்கவுண்ட் இல்லாதவரை பார்க்க முடியாது என்ற நிலை. தெரிந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் பயன்படுத்துகிறார்கள்.
இதே போன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங்கும். அறிந்து கொள்வது, கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம். வருங்காலத்தில் பெரும்பாலான பொருட்கள் ஆன்லைனில் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது பொருள் வாங்க அடுத்தவர் உதவிக்காக காத்திருப்பது கஷ்டம். எனவே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பியுங்கள். சிறிது சிறிதாக பழகுங்கள்.
இந்தியாவில் Ebay, Flipkart, Amazon, Myntra, Jabong, Snapdeal, Shopclues உள்ளிட்ட நல்ல தரமான ஷாப்பிங் தளங்கள் தங்கள் சேவையை செவ்வனே செய்து வருகின்றன. தங்களால் இயன்றவரை கஸ்டமர்களை திருப்தி படுத்துகின்றன. எனவே தான் அவை மேன்மேலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.
நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு என எளிமையான கட்டணம் செலுத்தும் வழிமுறைகள். வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு வசதி இல்லாதவர்களுக்கு, வீட்டுக்கு கொண்டு வந்து பொருட்களை கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொள்ளும் Cash on Delivery வசதி.
பொருட்கள் அளவு உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் வேறு அளவு மாற்றிக் கொள்ளும் Exchange வசதி. பொருள் பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெறும் Easy Return வசதி என இந்திய ஆன்லைன் தளங்கள் உலகத் தரத்தில் சேவையை வழங்கி வருவது உண்மை. உங்கள் வீடு தேடி வந்து பொருட்களை திரும்ப பெற்று செல்வார்கள்.
Flipkart , Amazon, Jabong போன்ற நிறுவனங்கள் பெரும்பாலான இந்திய நகர்களில் தனக்கென பிரத்தியேகமாக தங்கள் கூரியர் அலுவலகங்களை திறந்து உள்ளன.
சரி சார்... எனக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யணும்னு ஆர்வமாத்தான் இருக்கு..... எங்கிருந்து ஆரம்பிப்பது?
துவக்கத்திலேயே பெரிய அளவில் பணம் போட்டு பொருட்களை வாங்குவதை விட சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கிப் பழகுங்கள். ஆன்லைனில் ரூ. 10, ரூ. 20 போன்று மொபைல் ரீசார்ஜ் செய்து பாருங்கள். மொபைல் ரீசார்ஜ் செய்ய சிறந்த தளங்கள். http://paytm.com/ , http://freecharge.in/ . உடனுக்குடன் ரீசார்ஜ் ஆகி விடும்.
அடுத்து சிறிய விலை உள்ள பொருட்களை வாங்கி பழகலாம். அதற்கு ஏற்ற நம்பகமான தளம் அமேசான் (http://thuttu.com/stores/amazon).
இந்த இடத்தில் அமேசான் தளம் பற்றி சிறிய விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த தளத்தில் ஊறுகாய் முதல் மொபைல்கள் வரை பெரும்பாலான உபயோக பொருட்கள் கிடைக்கும். Cash on delivery உண்டு.
தற்போது அமேசான் பிரைம் (http://goo.gl/UCjbQg)பதிவு செய்து கொண்டால் இலவச ஷிப்பிங் வழங்குகிறார்கள்.
பொருட்கள் வாங்கும் முன்பு கீழே அந்த பொருட்களை ஏற்கனவே வாங்கிவர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை (Reviews) படித்துப் பார்த்து பொருட்களை வாங்குங்கள்.
பொருட்கள் ஒரு வாரத்திற்கு உள்ளாக உங்களை வந்து சேரும். பிடிக்கவில்லை என்றால் ரிட்டர்ன் செய்து கொள்ளலாம். பணம் திருப்பி அளிப்பார்கள்.
இலவச ஷிப்பிங் பெற அமேசான் தளம் சென்று அமேசான் பிரைம் (http://goo.gl/UCjbQg) பதிவு செய்து கொள்ளுங்கள்.
உதரணத்திற்கு சலுகைகயில் உள்ள சில பொருட்களின் பட்டியல் (துட்டு.காமில் உள்ள பட்டியல். அங்கே சென்று GET DEAL பட்டனை கிளிக் செய்து அமேசான் தளம் செல்லுங்கள்) :
Kissan Squeezo Fresh Tomato Ketchup, 450g worth Rs. 99 for Rs. 84 -http://goo.gl/fSweRj
Lipton Green Tea Pure and Light Tea Bags, 25 bags worth Rs. 140 for Rs. 98 - http://goo.gl/KOOVyX
Maggi Hot and Sweet Tomato Chilli Sauce , 500g worth Rs. 98 for Rs. 90 -http://goo.gl/73bNvm
Harpic White and Shine Bleach, 500 ml worth Rs. 72 for Rs. 68 -http://goo.gl/oObEJa
Harpic Powerplus Original, 500 ml worth Rs. 74 for Rs. 66 -http://goo.gl/RfbLqK
Vim Liquid Green Bottle - 500 ml worth Rs. 115 for Rs. 97 -http://goo.gl/dgrg89
Colgate Herbal Toothpaste - 200 g worth Rs. 89 for Rs. 75 -http://goo.gl/aVjg4L
ரூ. 245 மதிப்புள்ள Bru Gold Instant Coffee, 100g சலுகையில் ரூ. 184 க்கு -- http://goo.gl/4oiu7O
ரூ. 399 மதிப்புள்ள McAfee Anti-Virus Plus - 1 PC, 1 Year சலுகையில் ரூ. 99 க்கு -- http://goo.gl/6AedQS
ரூ. 465 மதிப்புள்ள Surf Excel Matic Front Load - 2 Kg சலுகையில் ரூ. 365 க்கு - http://goo.gl/h1VX7D
ரூ. 415 மதிப்புள்ள Surf Excel Matic Top Load - 2 Kg சலுகையில் ரூ. 315 க்கு - http://goo.gl/TVfbJ1
ரூ. 182 மதிப்புள்ள மூன்று Dove Cream Beauty Bathing Bar, 3 X 100g சலுகையில் ரூ. 154 க்கு - http://goo.gl/vwztMo
ரூ. 123 மதிப்புள்ள Kissan Fresh Tomato Ketchup Doy Pack, 1kg
சலுகை விலையில் ரூ. 111 க்கு - http://goo.gl/hSmP07
மேலே உள்ளவை எல்லாம் சிறிய உதாரணங்கள் மட்டுமே. ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 8 மணி இந்த பதிவு டைப்பிக் கொண்டிருக்கும் நேர விலை நிலவரம். நீங்கள் பார்க்கும் நேரத்தில் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
நீங்கள் வேண்டும் பொருளை அமேசான் தளம் (http://thuttu.com/stores/amazon) சென்று தேடி வாங்குங்கள். Amazon prime என்று இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இலவச ஷிப்பிங்.
எலெக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் நம்பி வாங்க மிகச் சிறந்த தளங்கள் அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல்.
அதே போல் ஆடை அணிகலன்கள், காலணிகள் வாங்க மிகச் சிறந்த தளங்கள் அமேசான், ஜபாங், மின்றா.
மேலும் இது போன்ற தினசரி சலுகைகளை அறிந்து கொள்ள நீங்கள் துட்டு.காம் http://thuttu.com/ தளம் சரியானது. அவ்வப்போது வரும் சலுகைகளை உடனுக்குடன் பதிவார்கள். பெரும்பாலான சலுகைகள் சில மணி நேரங்களில் காலாவதி ஆகி விடும் அல்லது விற்றுத் தீர்ந்து விடும். எனவே முந்துபவர்களுக்கே தள்ளுபடி சலுகைகள்.
நீங்கள் ஆண்டிராயிட் மொபைல் வைத்து இருந்தால் டீல்களை உடனுக்குடன் மொபைலில் பெற துட்டு.காம் ஆப் உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள். லிங்க் :https://play.google.com/store/apps/details?id=com.thuttu
பேஸ்புக்கில் இருந்தபடியே தொடர்ந்து சலுகைகளை பெறhttps://www.facebook.com/thallubadi தள்ளுபடி பக்கத்திற்கு Like போட்டு இணைந்து கொள்ளுங்கள்.
சிறிய வயதில் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நமது பெற்றோர் நமக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்கள். ஆன்லைனில் பொருட்கள் மலிவான விலையில் சிறப்பாக வாங்குவதை சிறுக சிறுக நாமே கற்றுக் கொள்வோம்.
நன்றி.
இவ்வளவு நேரம் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி. இதனை Share செய்வதன் மூலம் அதிகம் நண்பர்களை இந்த செய்தி சென்றடைந்து, அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் பற்றி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment