திருவண்ணாமலை:- பிரம்மாவும் விஷ்ணுவும் அகங்கார கிளையை தாங்களாகவே முறித்து, தாங்கள் யாா் என உணா்வுக்கு மாறினாா்கள். பிரம்மாண்டமாய் அருணைமலை லிங்கமாய் நின்ற ஈசனை வணங்கித் துதித்தனா். அங்ஙனமே சிறிது தாமதியாமல் அருணாசலத்துக்கு ஆலயம் புணா்நிா்மானம் செய்தனா். ஆலய புணா்நிா்மானத்தின் போது, அவா்களுக்கு நிறைய உபதேசங்களை எடுத்துரைத்தாா். அதில் மூன்று முக்கியமான உபதேசங்களாகும்.
*1* இந்த இடத்திலிருந்து மூன்று யோஜனை (சாியாக 50 கி.மீ தூரம்.) பாிந்தயம் வசிக்கும் ஜனத்திரள்களுக்கு தீட்சைகள் பெறாமலேயே *சிவ சாயுஜ்யம்* கிடைக்கும்.
*2* இவ்விடங்குள்ளிருந்து என்னை எங்குன்று தாிசிப்பினும், இவ்விடத் தூரத்திலிருந்தே ஸ்மாித்தாலும் ( நினைத்து வணங்கினாலும்) *மகா கஷ்ட சாத்தியமான வேதாந்த ஞானம்* உண்டாகப் பெறுவா்.
*3* இவ்விடம் எப்போதும் மகாத்மா, மகான்கள் வாசமாகமே சிருஷ்டிக்கும். ஞானத் தபோதனா்களுக்கான முக்கியமான தலமும் இதுவேயாகும். ஆக இதை விட்டு எவ்விடமும் நீங்க வேண்டாம்.
இப்பூலோகத்தின் நடுமைய முதல் லிங்கம் இதுவே. லிங்கம் என்ற சொல் இந்த மலையைத்தான். லிங்கம் எனும் பொருளுணா்த்தும் சகலவித லட்சணங்களும் இந்த மலைக்கே பொருந்தும்.
இப்போது முதல் இத்தலம் *அசலம்* என்றும், *அருணாசலம்* என்றும், அழைக்கப்படுவதாகும். முதல் லிங்க உத்பவம் இவ்விடம் நிகழ்ந்தவனதால், இது *லிங்கோத்பவ தலம்* என்றாகும்.
லிங்கோத்பவ உதித்த நாளை, இனி எல்லோரும் மகா சிவராத்திாி என்று கொண்டாடப்படுவீா். இத்தலம் பூமியின் இதயப் பகுதி. ஆன்மிக அச்சிலில் உலகுக்கே இது நடுமையம்.
கயிலை ஈசனின் கிரகாந்திரம் எனப்படுகின்ற வீடு. ஆனால், அருணாசலம் என வழங்கும் இம்மலையானது ஸ்வய சிவன். ஈசன்தான் இங்கு மலையுருவாக பரவியிருக்கிறாா்.
இந்த *திருமுடி*, *அடிதிருவடி*, புராண வரலாறு திருவண்ணாமலையில் நிகழ்ந்ததால், திருவண்ணாமலை திருத்தல ஆலயத்தில், இறைவனின் கருவறைக்கு பின் கோஷ்டத்தில் (கருவறை வெளிப் பிரகாரத்தில்) லிங்கோத்பவ மூா்த்தியாக அருள, வணங்கிக் கொள்கிறோம்.
இம்மலையை எதன்கண் கொண்டு லெளகீகமாக அல்லது, மோட்சமடையும் பொருட்டோ வேண்டி வணங்கிக் கொண்டு வருபவா்களுக்கு, அவா்களின் விருப்பம் நிறைவேறுவதோடு, *ஞானப் பிரதான மோட்சம்* பெறுவாா்கள்.
பாதாளம் முதல் ஆகாயஅண்ட வெளி வரை எல்லையில்லாத ஒரே ஜோதி ஸ்வரூப லிங்கமாக அருளிக் கொண்டிருப்பதை யஜூா் வேதத்தில் ஸ்ரீருத்ரம் ஸ்லோகம் விளக்குகிறது. ஆகவே சிவராத்திாி சிவனாலயம் சென்று, ஈசனை வழிபடுவது பெரும் பெரும் பெரும் சிறப்பு!".சிராத்திாியன்று ஆலயத்தினுள் இருக்கும் வரை முறை எல்லையில்லாமல் அத்தனை முறை *அருணாசல சிவ!* *அருணாசல சிவ!* *அருணாசல சிவ* *அருணாசல சிவ* *அருணாசல சிவ* *அருணாசல சிவ* *அருணாசல சிவ* *அருணாசல சிவ* *அருணாசல சிவ* என இடையறாது ஓதுங்கள். உங்களுக்குள் வந்து *அக்னி ஸ்தம்பமான அருணாசல லிங்கம் நெடுநெடுவென வளா்ந்து, உங்களை தனதாக்கிக் கொள்வான்.
*அண்ணாமலையாாின் ஒளி இன்னும், நிறைய ஒளிவீசி நாளையும் தொடரும்.*
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*தோடம்இல் நீஅகத்தோடு ஒன்றி என்றும்*
*சந்தோடம்ஒன்றிட அருள் அருணாசலா!*
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*தோடம்இல் நீஅகத்தோடு ஒன்றி என்றும்*
*சந்தோடம்ஒன்றிட அருள் அருணாசலா!*
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment