Tuesday, August 23, 2016

இளைய தலைமுறைக்கு அடிப்படை ஆன்மீகம்=பகுதி 1


உங்கள் ஒவ்வொருவருக்கும் இனிய வாழ்நாள் வணக்கங்கள்!


1990ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்துள்ள 99% இளைய சமுதாயத்தினருக்கு இந்து மதம்,சைவ சமயம்,வைஷ்ணவ சமயம் என்று எதுவும் தெரியவில்லை;அதே நேரம் 15.8.1995 முதல் இந்தியாவில் ராகுக் கிரகத்தின் காரகத்துவமான இணையம் பரவத் துவங்கியது;

இன்றோ 2016 !!!

கோவில்கள் எதற்காக நமது முன்னோர்களாகிய மன்னர்கள் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை;

ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சர்ச்சுக்குச் செல்கின்றார்கள்;அதன் மூலமாக அவர்களின் மத விழிப்புணர்ச்சியைப் பெறுகின்றார்கள்;

ஒவ்வொரு இஸ்லாமியர்களும் வெள்ளிக்கிழமை தோறும் மசூதிக்குச் செல்கின்றார்கள்;அதன் மூலமாக அவர்களின் மார்க்கத்தை அறிந்து கொள்கின்றார்கள்;

உலகத்தின் ஒரே ஒரு இந்து நாடான நமது இந்தியாவில் இந்து தர்மம் பற்றிய அடிப்படை ஞானமே இல்லாமல் இருப்பதால் நம்மை ஜி 8 நாடுகள் கொள்ளையடிக்கின்றன;

20,00,000 ஆண்டுகளாக நமது முன்னோர்களாகிய சித்தர்கள்,ரிஷிகள்,மகான் கள்,துறவிகளின் அனுபவத் தொகுப்புகள் ஒலைச்சுவடிகளில்,புத்தகங்களில்,கோவில் கல்வெட்டுக்களில் சித்த மருத்துவமாக,ஜோதிடமாக,வானியல் உண்மைகளாக,மூலிகை ரகசியங்களாக,அரசியல் நிர்வாகமாக புதைந்து கிடக்கின்றது;அதன் அருமை பெருமைகள் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை;இது பற்றிய ஒரு சிறு விழிப்புணர்ச்சியை இங்கே உருவாக்குகின்றோம்;

இதில் பல பதிவுகள் 2007,2008,2009 இல் வெளிவந்தவைதான்;ஆனால்,இங்கே கேள்வி பதில் வடிவில் !!!

1.இந்து மதம் என்றால் என்ன

இந்து மதம் என்றால் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை எப்படி வாழ வேண்டும் என்பதை ஆன்மீகம்+அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து தெரிவித்து இருக்கும் ஒரே மதம்;இது ஒரு வாழ்க்கை முறை;


2.இந்து மதம் எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது

இந்து மதம் ஆறு பெரும் பிரிவுகளைக்கொண்டது;

அ).விநாயகரை முழு முதற்கடவுளாக கொண்டு வழிபடும் முறைக்கு காணபத்தியம் என்று பெயர்;

ஆ)முருகக் கடவுளை முழு முதற்கடவுளாக கொண்டு வழிபடும் முறைக்கு கௌமாரம் என்று பெயர்;

இ)சூரியனை முழு முதற்கடவுளாக வழிபடும் முறைக்கு செளரம் என்று பெயர்;

ஈ)பரம்பொருளான சிவனை முழு முதற்கடவுளாக வழிபடும் முறைக்கு சைவம் என்று பெயர்;

உ) மஹாவிஷ்ணுவை முழு முதற்கடவுளாக வழிபடும் முறைக்கு வைஷ்ணவம் என்று பெயர்;

ஊ) சக்தியை முழு முதற்கடவுளாக வழிபடும் முறைக்கு சாக்தம் என்று பெயர்;

இதில் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான முதல் வழிபாடு சாக்தம் ஆகும்;ஸ்ரீலலிதா சகஸ்ர நாம ஸ்தோத்திரம் பற்றி முழுமையாக அறிந்தவர்களிடம் இது பற்றிய பல உண்மைகளை அறியலாம்;

சாக்தத்தில் இருந்து உருவானதுதான் சைவம்;
சைவத்தில் இருந்து உருவான மிகவும் இளைமையான வழிபாட்டு முறை தான் வைஷ்ணவம்;
மற்றவை பிற்காலத்தில் உருவானவை;

இன்றைய காலகட்டத்தில் இந்த ஆறில் ஒரு சில மட்டுமே உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன;1947 ஆம் ஆண்டுடன் முடிந்த 300 ஆண்டுகள் வரை கிறிஸ்தவ ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம்;1647 ஆம் ஆண்டுடன் முடிந்த 800 ஆண்டுகள் வரை இஸ்லாமியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம்;

800 ஆண்டுகளில் இஸ்லாமியர்களால் நமது இந்து தர்மம் பட்ட சிரமத்தை விடவும்,வெறும் 300 ஆண்டுகளில் கிறிஸ்தவ ஆங்கிலேயன்,நமது இந்து தர்மத்திற்குச் செய்த கேடுகள் மிக மிக மிக அதிகம்;

இரண்டையுமே இங்கே பார்க்கலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment