Tuesday, August 30, 2016

பாதகாதிபதிகள் என்ன செய்வார்கள்? ஜோதிட விளக்கக் கட்டுரை

பாதகாதிபதி செயல்கள்
=========================
சரத்திற்கு (மேசம், கடகம், துலாம், மகரம்) லாப ஸ்தானமும்
ஸ்திர ராசிக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சகம்) பாக்ய ஸ்தானமும்
உபயதிற்க்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) களத்திர
ஸ்தானமும்
பாதக ஸ்தனங்கள் மற்றும் அதன் அதிபதிகள் பாதகாதிபதிகள்.
சர லக்னத்து பாதகாதிபதிகள் - கால புருஷ சக்கரத்திற்கு பண பர கேந்திரங்களையும் (2, 5, 8, 11) பாதிப்பதை காணவும்
ஸ்திர லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் லக்ன கேந்திரங்களையும் (1, 4, 7, 10) பாதிப்பதை காணவும்
உபய லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் அசுப கேந்திரம் என்னும் அபோலீகதையும் (3, 6, 9, 12) பாதிப்பதை காணவும்.
இதன் மூலம் சர லக்ன பாதகாதிபதி பலம் பெற, பாதகாதிபதி தன் காரகத்துவ மூலம் பணவரவை தடுக்கும், பணம் தேவையற்ற வழிகளில் செலவழியும் அல்லது சேர்த்துவைத்த பணத்தால் அவமானம் ஏற்படும்.
இதன் மூலம் ஸ்திர லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் தொழில், மனைவி மற்றும் ஆரோக்கியம் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும்.
இதன் மூலம் உபய லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் வீரிய இழப்பு, எதிரிகளால் தொல்லை மற்றும் காம எண்ணங்களால் பாதிப்பு போன்றவைகள் ஏற்படும்.
பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார்
=============================================
1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, திரிகோண அதிபதி பலம் பெற நற்பலன்கள் உண்டாகும். முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும்.
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு கொள்ளாமல், லக்னத்துக்கு மறைவு பெறும் போது நன்மை செய்வார்கள். கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருக்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
6. பாதகாதிபதி வக்கிரம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்க்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் என்ற கூற்றுபடி, பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் நற்பலன்கள் உண்டு.
11. பாதகாதிபதி அஸ்தங்கம் பெற, அந்த கிரக காரகத்துவம் பாதிக்கபட்டு, பாதகா ஸ்தனம் பலம் இழக்கும்.
12. பாதகாதிபதி ராசியதிபதியாக வரும்போது தீமைகள் செய்வதில்லை.
13. பாதகாதிபதி ராசி அதிபதியாக வந்தால் பாதகம் செய்யமாட்டார்
குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை நன்மையே செய்யும். ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு அல்ல.

இது போன்று எளிமையாகவும்,விரைவாகவும் ஜோதிடம் கற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்;வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் +91 9092116990ஆடியோ வாய்ஸில் விண்ணப்பிக்கவும்)
120 நாட்களில் தொழில் முறை ஜோதிடர் ஆகிவிடுவீர்கள்!!!!

No comments:

Post a Comment