Wednesday, August 24, 2016

இளைய தலைமுறைக்கு அடிப்படை ஆன்மீகம்=பகுதி 3


4.இந்து தர்மத்தை பரந்துவிரிந்த மஹாசமுத்திரம் என்று கூறுகின்றீர்கள்; ஏன்

நமது தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்;எப்படி இருக்க வேண்டும் என்பதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களாகிய சித்தர்கள்,ரிஷிகள் வரையறுத்துவிட்டார்கள்;

அவைகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்;


காலையில் தூங்கி எழும்போது,அதாவது கண்விழிக்கும் போது இரு உள்ளங்கைகளையும் விரித்து வைத்துக் கொண்டு ஓம் உத்தாதலக மகரிஷி போற்றி! போற்றி!! போற்றி!!! என்று மூன்று முறை ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக ஈசனின் அருளும்,மூதேவியின் ஆசியும் கிட்டும்;


அதென்ன மூதேவியின் ஆசி


நமக்கு கதை சொல்லித்தான் புரிய வைப்பது பழக்கம்;அதனால் கதை சொல்லியே புரிய வைக்கலாம்;


அமுதம் வேண்டி பாற்கடலைக் கடையும் போது பல பொருட்கள் அதில் இருந்து வெளிவந்தது;ஆனால்,அதில் இருந்து வந்த மூத்த தேவியை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை;இதை கவனித்த உத்தாதலக மகரிஷி அவர்கள் தாம் மூத்ததேவியை ஏற்பதாக தெரிவித்தார்;


அப்படி அவர் தெரிவித்ததும்,பரமேஸ்வரனாகிய சர்வேஸ்வரன் என்ற சிவபெருமான் உடனே ஒரு வரம் தருகின்றார்;யார் தினமும் உம்மை(உத்தாதலக மகரிஷி) நினைக்கின்றார்களோ,அவர்களுக்கே எமது அருள் கிடைக்கும் என்பதே அந்த வரம்!


அதே சமயம்,மூத்த தேவியும் ஒரு வரம் தருகின்றாள்;
“யார் எனது கணவரை தினமும் நினைக்கின்றார்களோ,அவர்களின் இருப்பிடத்தில் நான் வசிக்க மாட்டேன்”


இங்கே ஒரு சந்தேகம்


மூதேவி வசிப்பதற்கான அடையாளங்கள் என்னென்ன


வீடு முழுக்க புத்தகங்கள்,ஆடைகள்,பாத்திரங்களை அடுக்கி வைக்காமல் இருப்பது;

அழுக்கான ஆடைகளை அணிவது;

குளிக்காமல் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்பது;

உடலின் மறைவான உறுப்புக்களை தினமும் (குளிக்கும் போது) சுத்தப்படுத்தாமல் இருப்பது(இதைத்தான் அகச் சுத்தமின்மை என்று கூறினார்கள்)

எப்போதும் புலம்பிக் கொண்டே இருப்பது;

வீட்டிற்குள் துர்நாற்றம் வீசும் விதமாக வீட்டைப் பராமரிப்பது;அதே போல நமது உடலையும்!

காலை உணவை 9 மணிக்குள் சாப்பிடாமல் இருப்பது;


மாலை  6 மணிக்குப் பிறகு வீட்டிற்குள் பெருக்குவது;

ஆண்களும்,பெண்களும் தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பது;

பெண்கள் எப்போதும் தலைவிரிக்கோலமாக வீட்டை விட்டுத் திரிவது;

அழுக்கே தெரியாத ஆடையான ஜீன்ஸ்ஸை ஆண்களும்,பெண்களும் நாறும் அளவுக்கு அணிவது;


எப்போதும் கைலி அணிந்து வேலை பார்ப்பது;

துறவு ஏற்காமல் காவி ஆடை,காவி வேட்டி அணிவது;

ஆள்காட்டிவிரலால் பல் தேய்ப்பது;

இவைகள் அனைத்தும் மூதேவியின் அம்சங்கள்;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


No comments:

Post a Comment