குளிக்கும் பொழுது சொல்லவேண்டிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றி அகத்தியப் பெருமான் மிகப் பெருமையாக கூறியதை கீழே தருகிறேன்.
அகமர்ஷணம் என்கிற ஒரு தொகுப்பிலிருந்து, ஒரு ஸ்லோகத்தை அவர் கூறி, இதை குளிக்கும் பொழுது குறைந்தது மூன்று முறை ஜெபித்து வந்தால், "பிரம்ம ஞானம்" ஏற்படும் என்று கூறி உள்ளார்.
உடனேயே ஒரு அவா. அதை தமிழில், பிரிண்ட் போட்டு, குளிக்கும் அறையில் ஒட்டிவிட்டேன். யாரெல்லாம் அதை பார்த்து விரும்பி சொல்கிறார்களோ, அவர்களுக்கு அதன் பலம் கிடைக்கட்டும் என்கிற எண்ணம் தான்.
குழந்தைகளை பொருத்தவரை, சிறு வயதிலேயே, மந்திரம் மனதுள் ஏறிவிட்டால், அவர்கள் மனம் எளிதில் செம்மைப்படும்.
நம்மை போன்றவர்களுக்கு, இப்பொழுதேனும், ஏறினால், நம் வாழ்க்கையை, சமன்படுத்திக் கொள்ளலாம்.
ஓரளவுக்கு, கவனமும், ஆன்மீகமும் நம்முள் புகுத்துவிட்டால், நாம் தேடுகிற நிம்மதியை, இருக்கும் இடத்திலேயே, நல்ல விஷயங்களை செய்து, கூறி நன்மை அடைந்துவிடலாம்.
"ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹாஹா"
இதை, நகல் எடுத்து, குளிக்கும் அறையில் ஒட்டி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும், பயன்பெற்று அகத்தியர் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன்
No comments:
Post a Comment