சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் நுனி முடியின் வெடிப்பை மறைந்து போய், அடர்த்தியான முடி வளரும்.
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு நன்கு அலசிவிடுங்கள். ஷாம்பு போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவது நின்றுவிடும்.
No comments:
Post a Comment