பொதுவாகவே காஷ்மீரில் ஒரு தொன்று தொட்ட அரசியல் அசிங்கம் ஒன்று உண்டு. உள்ளூர் தீவிரவாதிக்கு பயந்து அவனுக்கு தேவைப்பட்டா மாதிரியே பேசுவது. அதே நேரத்தில் அவனோட பேசி வைத்துக் கொண்டு அவனை திட்டுவது போல பாவனை செய்வது என... மக்களுக்கு இந்த நாடகம் தெரியும் ஆனா கண்டுக்க மாட்டாங்க... விளைவு இதுவரை இருந்த அரசுகள் அனைத்துமே தேசவிரோத, தீவிரவாத, பயங்கரவாத சக்திகளை கண்டுகொள்ளாமலே விடுவது...
காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சி வந்தவுடன் இந்த நிலை தலைகீழாக மாறியது. கடுமையான கெடுபிடிகளுடன் கூடிய கட்டுபாடுகளையும், தீவிரவாதிகள் - பயங்கரவாதிகளின் நடமட்டத்திற்கு கடுமையான நெருக்கடியும் தரத்துவங்கிய பின் நிலைதடுமாறத் துவங்கினர். புர்ஹான் வாணியின் கொலையும் இப்படி நடந்ததுதான்... யாரும் இந்தப்பயலை கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் இவன் செய்யும் சில்லுண்டித்தனங்கள் தொடரும் என்ற நிலையில் அவனை போட்டு தள்ளியது காவல்துறை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதெல்லாம் ஜம்மு காஷ்மீரின் காவல்துறை மட்டுமே நடத்திய என்கவுண்டர்கள். ஆக அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே ஆதாரம்.
எதிரியின் கையை வைத்தே அவனோட கண்ணை குத்தனும்னு நமக்குத்தான் தெரியுமே... ஒருகாலத்தில் தீவிரவாதத்திற்கு துணைபோனவர்கள் எல்லாம் இப்ப நமது அரசோட இணைந்தி தீவிரவாதம் - பயங்கரவாதத்திற்கு எதிரா போரிடும் நிலையை அரசு செய்துள்ளது.
இப்ப பாருங்க மெஹபூபா முஃப்தியின் வாதத்தை... ஒழுங்கா போய் பசங்கல்லாம் படிங்க... நமக்கு டாக்டர், ஆசிரியர், என்ஜினியர், பல்-கண் மருத்துவரெல்லாம் தேவை. கல்லை அடிச்சுகிட்டு இருந்தா நாளைக்கு தேவைப்படும்போது டாக்டரே இல்லாத நிலை நமது சமுதாயத்திற்கு வரும்னு அறிவுரை கூறி இருக்கறது அங்க நடக்கும் அரசியல் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்ட்டுள்ளதை தானே காட்டுது...
No comments:
Post a Comment