இன்பம் மற்றும் வசதிகளை அதிகரிக்கும் விதமான கருவிகள்,கண்டுபிடிப்புகளைத்
தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டத்து நாடுகள் இதுவரை கண்டறிந்துள்ளன;
ஆனால்,இந்தக் கண்டுபிடிப்புகளால் நம் ஒவ்வொருவருக்கும் நன்மைகளை விடவும்
தீமைகளே அதிகமாக விளைகின்றன;
உதாரணமாக,தொலைபேசியில் தொடர்ந்து 22 நிமிடங்களுக்கு மேல்
பேசினால்,அதில் இருந்து உருவாகும் கதிர்வீச்சு நமது உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது;அதே
போல,செல் போனில் தொடர்ந்து 12 நிமிடங்களுக்கு மேல் பேசினாலும்,தூங்கும் போது நமது தலைக்கு
அருகில் செல்போனை வைத்துக் கொண்டு தூங்கினாலும் அதன் கதிர்வீச்சு நமது மூளையையும்,நரம்பு
மண்டலத்தையும்,காதுக்குள் இருக்கும் நரம்புகளையும் பாதிக்கின்றது;
தூங்கும் போது தலைக்கு அருகில் செல்போனை (அணைக்காமல்) வைத்து தூங்குவதால்,மூளை
புற்று நோய் உருவாகும் என்று லேட்டஸ்ட் மருத்துவ ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன;
மைதாவில் செய்யப்படும் உணவு எப்போதுமே நமக்குக் கெடுதலைத் தந்திருக்கின்றது;நமது
ஜீரண மண்டலத்தைக் கெடுத்திருக்கின்றது;
மைதாவில் தான் பிஸ்ஸா,பர்கர் செய்கின்றனர் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத்
தெரியும்? நமது பாரம்பரிய உணவுகளான இட்லி,தோசை,சாதம்,புளி சாதம்,எலுமிச்சை சாதம்,தக்காளி
சாதம்,தேங்காய் சாதம்,கறிவேப்பிலை சாதம்,மல்லிகை சாதம் போன்றவைகளால் நமக்கு ஆரோக்கியமே
கிடைத்துவந்திருக்கின்றது;
இவைகளை விடவும் மேல்நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியம்
மிக்கதா?(மேற்கு நாடுகள் ஒரு புதிய உணவைக் கண்டுபிடிகின்றது என்று வைத்துக் கொள்வோம்;,அதன்
மூலமாக எந்த விதமான நோய் அதைத் தொடர்ந்து உண்பவர்களுக்கு உருவாகும் என்பதையும் சேர்ந்தே
ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கின்றது
பின்னர், அந்த நோயை குணப்படுத்தும் மருந்தையும் கண்டுபிடித்துவிடுகின்றது;
அதன் பிறகே அந்த உணவை உலகம் முழுக்க விற்பனை செய்யத் துவங்குகின்றன; இதில் குழந்தை
உணவாக இருந்தாலும் சரி;துணை உணவாக இருந்தாலும் சரி;நோயாளிகளுக்கான உணவாக இருந்தாலும்
சரி)
உணவே மருந்து;மருந்தே உணவு என்பது நமது(பாரதத்தின்) பண்பாடு;இதை சுயநலம் மிக்க
மேல்நாடுகள் உணவே நஞ்சு,நஞ்சு மூலமாக பணம் பண்ணு என்பதை உலமயமாக்கி,உலகத்தையே அடிமையாக்கிட
முயன்று வருகின்றன;
அதே சமயம்,கீழ்த்திசை நாடுகளில் குறிப்பாக நமது பாரதத்தில் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு,கண்டுபிடிக்கப்பட்ட ஜோதிடம்,யோகாசனம்,வாஸ்து,இயற்கை மருத்துவம்,சித்த
மருத்துவம்,சரக்கலை,மூலிகை மருத்துவம்,கல்லாடம்,சோடேச கலை,சோடேச தியானம்,மருத்துவ யோகா,மந்திர
ஜபம்,சகுன சாஸ்திரம்,வானியல் போன்றவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கே நன்மையைத் தான்
கொடுத்து வந்துள்ளன;இவைகளின் முக்கியத்துவத்தால் இன்று நமது சனாதன தர்மம் எந்த ஒரு
கட்டாயப்படுத்துதலும் இன்றி உலகம் முழுக்கவும் பரவி வருகின்றது;
நாம் ஒவ்வொருவருமே இன்பத்தையும்,வசதியையும்,செல்வச் செழிப்பையும் தான்
தேடுகின்றோம்;ஆனால்,உண்மையான இன்பம் தூய ஆத்மாவில் இருக்கின்றது; ஆகவே,நிறைவான ஆனந்தம்
என்பது நமக்கு உள்ளேயே இருக்கின்றது;அதைத் தூண்டுவதற்காகவே,தூண்டும் விதமாகவே நமது
தினசரி வாழ்க்கையில் தெய்வீகத்தை நமது முன்னோர்கள் இணைத்து வைத்துள்ளனர்;
நம்முடைய பிறவிகள் ஒவ்வொன்றும்(ஆமாம்,நம்மில் பெரும்பாலானவர்கள்
1000,2000 சிலர் 2,00,000 )இறைவனின் நினைவோடுதான் வந்திருக்கின்றது;இப்படி இருக்கும்
போது,அதை மறந்துவிட்டு, கடவுள் உண்டா? இல்லையா? என்ற விதாண்டாவாதம் நம்மை மேலும் பாவியாக்கிவிடும்;
இந்த விதாண்டாவாதம் உருவாகக் காரணமே,நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாதது
தான்;
யார் தன்னை நம்புகிறார்களோ,அவர்களுக்கு வெகு சீக்கிரமாக ஆன்மீக முயற்சிகள்
வெற்றியைத் தரும்;ஏனெனில்,யார் தன்னை நம்புகிறார்களோ,அவர்களால் கடவுள் நம்பிக்கையும்
வரும்;
நம்மை நம்புபவர்களால் தான் படிப்படியாக கடவுளை உணரும் தன்மை மனதுக்குள்
உருவாகும்;அதன் பிறகு,இறைசக்தி ஆன்மாவுக்குள்ளும் அது ஊடுருவும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment